இந்து மதம்
" இந்து மதம் "
மதம் என்றால் என்ன ?
ஒரு மதம் பிடித்த யானையை பலத்த சங்கிளிலியால் கேட்டிபோடுவதை போல வாழ்கையில் நெறி கெட்டு திரியும் மனிதனை நல் வழி படுத்துவதே மதங்கள் ஆகும் .உலகில் எத்தனயோ மதங்கள் உள்ளன அனால் அனைத்து மதங்களின் சாரமும் ஒன்றே மனிதனை அற நெறியில் செல்ல வைப்பதே. அப்படி பல மதங்களில் ஒன்றே நம் இந்து மதம் ஆகும். பலவற்றில் ஒன்று என்று சொல்லுவதை விட அனைத்திலும் சிறந்தது என்று சொல்லுவதே சிறப்பாகும்.
அப்படி என்ன சிறப்பு இருக்கிறது நம் இந்து மதத்தில் ?
நம் மதத்தை இந்து மதம் என்று சொல்லுவதை விட சனாதன தர்மம் என்று சொல்லுவதே சிறப்பாகும் . இறைவனை அடைய நாம் செல்லும் இந்த வழியை சனாதன தர்மம் என்றே நம் முன்னோர்களால் பின் பற்றப்பட்டது . "இந்து மதம் " என்ற பெயர் அன்னியர்களால் இட பட்டது . அதாவது சிந்து நாகரிக மக்களால் பின் பற்ற பட்ட சனாதன தர்மமே இந்து மதம் என்று அன்னியர்களால் அழைக்கப்பட்டது. இது நமக்கு இடையில் வந்த பெயர் ஆகும்.
இந்து மதம் யாராலும் உருவாக்க பட்டதல்ல ....எப்போது தோன்றியது என்ற யாராலும் கணிக்க முடியவில்லை. உதாரணமாக கிறிஸ்து மதம் ஏசுவுக்கு பின் தோன்றியவை , முஸ்லிம் மதம் முகமது நபியால் உருவாக்க பட்டவை , பௌத்த மதம் புத்தருக்கு பின் தோன்றியவை அனால் நம் இந்து மதமோ இப்படி யாராலும் உருவாக்க பட்டது அல்ல.இது பல யுகங்களை கடந்து நிற்க்கிறது.
யுகங்கள் என்றால் என்ன ?
காலங்களின் அளவே யுகம் என இந்து மதங்களில் அழைக்கபடுகிறது. யுகங்கள் மொத்தம் நான்கு , அவை
1 ) க்ருதயுகம்
2 ) திரேதாயுகம்
3 ) துவாபரயுகம்
4) கலியுகம்
என்பனவாகும். இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு கால அளவுகளைக் கொண்டன. இவற்றுட் சிறிய யுகமான கலியுகம் நான்கு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரம் (4,32,000) ஆண்டுகள் கொண்டது. துவாபர யுகம் கலியுகத்திலும் இரண்டு மடங்கு கால அளவு கொண்டது. இது 8,64,000 ஆண்டுகளையும், கலியுகத்திலும் மூன்றுமடங்கு பெரியதான திரேதா யுகம் 12,96,000 ஆண்டுகளையும் கொண்டன. கிருத யுகம் மொத்தம் 17,28,000 ஆண்டுகள் கொண்டது. இது கலியுகத்தின் நான்கு மடங்கு பெரியதாகும்.இப்பொழுது நாம் வாழும் இந்த யுகம் கலியுகம் ஆகும்.இப்படி பல யுகங்களை கடந்து வந்துள்ளது நம் இந்து மதம்.
நான்கு வேதங்கள் , உபநிதங்கள் , மற்றும் பல புராணங்கள் , சடங்கு சம்பிரதாயங்களை கொண்டது நம் இந்து மதமாகும்.ஒவ்வொன்றும் மனிதர்களை நல் வழி படுத்த வியாசர் மற்றும் பல முனிவர்கள் மூலம் இறைவன் நமக்கு அளித்த அருள் கொடைகளாகும்.
வேதங்கள் என்றால் என்ன ?
மந்திரங்கள் மற்றும் இறை துதிபாடல்களை உள்ளடக்கியதே வேதங்கள் ஆகும்.வேதங்கள் மொத்தம் நான்கு வகை , அவை
1 ) ரிக் வேதம்
2 ) யஜுர் வேதம்
3 ) அதர்வண வேதம்
4 ) சாம வேதம் என இப்படி நான்கு வேதங்கள் ஆகும் .
பல கடவுள் ஏன் ?
ஹிந்து மதம் அதை பின்பற்றுவருக்கு பல சுதந்திரங்களை தந்துள்ளது. இந்த நேரத்தில் தான் இறைவனை தொழ வேண்டும் இப்படி தான் வழிபட வேண்டும் என்று பிறர் கருத்துகளை நம் மீது தினிபதில்லை.அவரவர் என்னங்களுகேர்ப்ப இறைவனை வழிபடலாம் என்கிறது. இது எந்த மதத்திலும் இல்லாத கருத்து. இவ்வாரே வந்ததுதான் சிவ , விஷ்ணு , மற்றும் சக்தி வழிபாடு ஆகும்.
பிற மதத்தவர் நம் மதத்தை பார்த்து கேட்கும் கேள்வி இது தான் " பல கடவுள் இந்து மதத்தில் ஏன் ?...உண்மையில் பல கடவுள் உண்டா என்றால் இல்லை ... பிறகு யார் இந்த சிவன் , விஷ்ணு , பிரம்மா, பார்வதி , லட்சுமி சரஸ்வதி . இவர்களெல்லாம் ஒரே பரமாத்மாவின் வெவ்வேறு அம்சங்களே. அந்த பரமாத்மா உயிர்களை படைக்கும் போது பிரம்மா என்றும் , படைத்த உயிர்களை காக்கும் போது விஷ்ணுவாகவும் , படைத்த உயிர்களை அழிக்கும் போது சிவனாகவும் பார்கின்றனர் நம் இந்து மதத்தவர்கள்.அந்த பரமாத்மாவின் அளவற்ற சக்தியே பராசக்தி , அவரின் அளவற்ற செல்வமே லக்ஷ்மி , அவரின் ஞானமே சரஸ்வதி இவ்வாறு ஒரே பரமாத்மாவின் பல நிலைகளே பல கடவுளாக இருக்கிறது ஹிந்து மதத்தில். இப்படி பல வடிவங்களில் யாரை வணங்கினாலும் நாம் அந்த ஒரே பரமாத்மாவையே வழி படுகிறோம். இந்து மதத்தில் இறைவனுக்கு ஏன் இந்த பல வடிவங்கள் என்று கேட்டால் பொதுவாக நாம் பள்ளி பருவங்களில் கணக்கு பாடங்களில் பாத்திருப்போம் ஒரு பெரிய கணக்கை பல steps ஆக பிரித்து வகுத்து இறுதியில் ஒரே விடையாக தந்துருப்பர்கள் . ஏன் இப்படி பல steps என்று கேட்டால் நாம் எழிதில் அந்த கணக்கை புரிந்து கொள்வதற்கு , இப்படி நாம் ஒரே பரமாத்மாவை பல வடிவங்களில் ஏதாவது ஒரு வடிவினை பற்றிக்கொண்டு இறைவனை சாதாரண மக்களும் எழிதில் புரிந்து கொள்வதற்கே என்பது இந்து மதத்தின் கூற்று .எப்படி ஒரு கணக்கில் பல steps இருந்தாலும் இறுதில் ஒரே விடையே தருவது போல் நாம் இப்படி பல வடிவங்களில் இறைவனை வழிபடுவதினால் இறுதியில் அடைய போவது அந்த ஒரே பரமாத்மாவைத்தான்......