Mail Me

antos songs

Sunday, September 18, 2011

புயல் குட்டி




'யாருடா அது?!'
புன்னகைக்கிறேன் நான்
புல் மாமா வந்துவிட்டான்'
நிறுத்தாமல் சிரிக்கிறாள்!

கைகளை நீட்டினேன் 
என்னை தூக்கி 
அள்ளிக்கொண்டாள் அவள்!

முத்தங்கள் தருகிறேன் 
என் உதட்டினை துடைக்கிறாள்!

மடியில் ஏந்திக்கொண்டேன் நான் 
தோள் தட்டி 
தாலாட்டுகிறாள் அவள்!

வாங்கி வந்த 
சாத்துக்குடியை 
'உரித்துக் கொடு மாமா'
என சப்புக்கொட்டியவளுக்கு 
ஞாபகம் வந்திருக்குமோ!
'என்ன வாங்கிக்கொண்டு வரவேண்டும் 
புல் குட்டிக்கு?!'

என்று தொலைபேசியில் கேட்டதற்கு,
'டிபொம்மைஎன பதில் சொன்னது!

குனியச்சொல்லி 
முதுகில் ஏறுகிறாள் 
டியின் மீது சவாரி செய்கிறாள் !     சிரிக்கிறாள்!
  

Sunday, September 11, 2011

வாழ்க்கை

 

வாழ்க்கை

வாழ்க்கையில் மகிழ்ச்சி தேவை என்றால் முதலில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் உங்கள் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமென எண்ணுவதை நிறுத்துங்கள். நீங்கள் வருந்துவதாலோஅதையே நினைத்துக் கொண்டு இருப்பதாலோ எதுவும் மாறப் போவதில்லை. வாழ்வை அதன் போக்கில் விட்டுஉங்கள் முயற்சியைத் தொடருங்கள். நடப்பவை அனைத்தும் நன்மைக்கே என எடுத்துக் கொள்ளுங்கள். 

எரிமலை சாம்பலில் அதிக சத்துக்கள் இருப்பதைப் போல் எந்த ஒரு துன்பத்திலும் நிச்சயம் ஒரு நன்மை இருக்கும். அன்னப்பறவை போல் துன்பத்தை விலக்கி நன்மையை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். எல்லா வெற்றிகளுக்கும் பின்னால் நிச்சயம் ஒரு வலி மிகுந்த கடினப் பாதை இருக்கும்.
மற்றவர்களிடம் குறை காணுவதை விட்டு உங்களுக்குள் என்ன நடக்கிறது என கவனியுங்கள். உங்கள் ஆழ்மனதின் விருப்பங்கள்நம்பிக்கைகளை அறிந்துஅதன் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றிஉங்களின் லட்சியத்திற்குத் தயார் படுத்துங்கள். 
அனைத்து வசதிகளும் இருந்தால்தான் சாதிக்க முடியும் என்பது தவறு. வசதி இருப்பின்வரும் வாய்ப்புகளை மட்டுமே பயன்படுத்த முயலுவோம். இல்லாவிட்டால்இனி என்ன செய்யலாம் என யோசித்தே மற்றவருக்கும் வாய்ப்புகளை வழங்குவோம். 
எப்போதும் ஏதோ ஒன்றை நினைத்து வருந்திக் கொண்டு நிம்மதியின்றி இருப்பவன் பைத்தியமென ஹெரொடொடுச் என்ற அறிஞர் கூறுகிறார்.
மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதை விட்டுவிட்டுகடவுள் ஒரு வழியை மூடினால் ஒரு வழியைக் காட்டுவார் என எண்ணுங்கள். அதில் உங்களால் எவ்வளவு தூரம் சாதிக்க முடியும் எனப் பாருங்கள்.
வெற்றியும் மகிழ்ச்சியும் பயணங்கள்தாம். அவை ஒருபோதும் குறிப்பிட்ட முற்றுப்புள்ளிகள் ஆகாது. எம்மால் ஒருபோதும் வாழ்வின் எந்தக் கட்டத்தினதும் இறுதி முடிவாக மகிழ்ச்சியையோ அல்லது வெற்றியையோ கண்டு கொள்ள முடியாது. மாறாக நாம் தாம் வெற்றி மற்றும் மகிழ்ச்சி என்பன காணப்படுகின்ற பாதைகளைத் தெரிவு செய்து எமது பயணங்களைத் தொடர வேண்டும். இவ்வாறு பயணப்படுகையில் வெற்றியையும் மகிழ்ச்சியையும் எம்மால் கண்டு கொள்ள முடியாவிட்டால் அவற்றை எம்மால் ஒருபோதும் கண்டு கொள்ள முடியாது