Mail Me

antos songs

Monday, March 30, 2009

தீண்டத்தகாத உணவா சோறு?

தீண்டத்தகாத உணவா சோறு?


அவர் ஒரு நீரிழிவு நோயாளி. நீண்ட நாட்களாக மருந்து சாப்பிடுகிறார். ஆனால், இரத்தத்தில் சீனியின் அளவு கட்டுப்படுவதில்லை. முட்டாள்களின் கோபம் போல இவரது குருதிச் சீனியின் நிலை திடீர் திடீரென தாறுமாறாக ஏறி இறங்கிக் கொண்டே இருக்கும் .`சாப்பாட்டில் அவதானம் எடுங்கள்' என்றேன்.

"அப்ப சோறை நிப்பாட்டட்டோ' என்றார்.

நான் மனதிற்குள் சிரித்துக் கொண்டு `சோற்றை நிப்பாட்டிப் போட்டு வேறை என்ன சாப்பிடுவியள்" என அப்பாவியைக் கேட்டேன்.

`வேறை என்ன? இடியப்பம், புட்டு, அப்பம், தோசை இதுகளைத்தான்' என்றார்.

உரல் போல் தொடைகளும், ஊதிய பலூன் போல முகமும் கொண்ட குண்டு மனிதர் இன்னொருவர். அவருக்கும் எடையைக் குறைப்பதற்காக உணவைக் கட்டுப்படுத்தும்படி ஆலோசனை கூறியபோது, முன்னவரோடு கதைத்து வைத்தவர் போல 'சரி நான் சோத்தை கைவிடுகிறன்' என்றார்.

`சோறு சாப்பிட வேண்டாம் என நான் சொல்லவில்லையே......' என நான் ஆரம்பிக்கவும், என்ன இந்த டாக்டர் மடைத்தனமாகக் கதைக்கிறார் என மனதிற்குள் எண்ணியவர் போல ஏளனமும் ஆச்சரியமும் கலந்த பார்வையை என்மீது வீசினார்.

காய்ச்சல்கார பிள்ளையோடு வந்த அம்மா நான் உணவு பற்றி எதுவும் சொல்லாத போதும் தானாகவே 'இவனுக்கு சோத்தை நிப்பாட்டிப் போட்டு பாண் வாட்டிக் கொடுக்கிறேன்' என்றாள்.

ஏன் இவர்களுக்கெல்லாம் சோறு தீண்டத்தகாத உணவாக இருக்கிறது? அப்படியும் சொல்ல முடியாது. இவர்கள் யாவரும் வழமையாக சோறு தான் உண்ணுகிறார்கள். ஆனால், நோயுற்ற நேரத்திற்கு மட்டும் சோறு ஏற்புடையதல்ல என எண்ணுகிறார்கள். இவை தவறான கருத்துத்தான்.

ஆசிய நாட்டவர்கள் அனைவரினதும் பிரதான உணவான அரிசியில் மாப்பொருள் மாத்திரமின்றி புரதம், விற்றமின்கள், கனியங்கள், நார்ப்பொருள் யாவுமே உண்டு. அதிலும் முக்கியமாக தீட்டாத அரிசியிலும் புழுங்கல் (நாட்டு) அரிசியிலும் இவை அதிக செறிவில் உள்ளது. உண்மையில் தாவர உணவு மட்டும் உண்பவர்களின் தினசரி புரதத் தேவையின் பெரும் பகுதியை அரிசியே நிறைவு செய்கிறது என்பது பலரும் உணராத உண்மையாகும்.

இடியப்பம், பிட்டு , அப்பம், தோசை போன்ற பலகாரங்கள் யாவற்றினதும் முக்கிய கூறாக அரிசிதான் இருக்கிறது. ஆனால், பருக்கைகளாக அல்லாது மாவாக இருக்கிறது.எனவே முதலாமவர் கூறியதுபோல சோற்றை முற்றாக நிறுத்தி இடியப்பம், புட்டு , அப்பம், தோசை போன்றவற்றைச் சாப்பிடுவதில் எந்தவித அர்த்தமும் கிடையாது. இரண்டிலும் உள்ளது மாப்பொருள்தான்(Starch) . எனவே எதைச் சாப்பிடுகிறோம் என்பது முக்கியமல்ல.

இரண்டாமவர் கூறியதுபோல, சோற்றைக் கைவிடுவதிலும் எந்தவிதத்திலும் விஞ்ஞான பூர்வமான காரணமும் கிடையாது. அவர் இவற்றில் எதைச் சாப்பிடுகிறார் என்பதை விட எவ்வளவு சாப்பிடுகிறார் என்பதே முக்கியமானது. மாப்பொருள் உணவுகளான சோறு, இடியப்பம், பிட்டு, அப்பம் போன்றவற்றின் அளவைக் குறைத்து குறைத்த உணவின் அளவுக்கு ஏற்ப நார்ப்பொருள் அதிகமுள்ள கீரை இலை வகைகள் , மரக்கறி , பருப்பு, பயறு, சோயா பழவகைகள் ஆகியவற்றை அதிகரித்துச் சாப்பிட வேண்டும். இதனால் ,உண்டவை மெதுவாகச் சமிபாடடையும். விரைவில் மீண்டும் பசிக்காது. எடையும் அதிகரிக்காது.

காய்ச்சலின் போது உடலிலிருந்து சக்தி சூடாக வெளியேறுகிறது. அதை ஈடுசெய்ய போதியளவு போஷாக்குள்ள உணவு உட்கொள்வது அவசியமாகும். சோறு போஷாக்குள்ளது என்பதால் அதையே உட்கொள்ளலாம். விருப்பமில்லையேல் பாற் கஞ்சியாகக் குடிக்கலாம். அல்லது சக்திப் பெறுமானமுள்ள வேறு உணவுகளை உட்கொள்ள வேண்டும். பலரும் காய்ச்சல் என்றவுடன் சோடா வேண்டும் என்பார்கள். சோடா என்று நாம் வழமையாகக் கூறும் மென்பானங்களில் இனிப்புத் தவிர்ந்த போஷாக்கு எவையும் கிடையாது என்பதால் அவை விரும்பத்தக்கவை அல்ல.

எனவே, நீங்கள் எந்நேரத்திலும் எந்த நோயின் போதும் சோறு சாப்பிடலாம். சோறு சாப்பிடுவதால் எந்த நோயும் அதிகரிக்கப் போவதில்லை. அது தீண்டத்தகாத உணவல்ல. ஆயினும் அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். சோறு ஆனாலும் அளவோடு உண்ணுங்கள்.

கல்சியம் மாத்திரைகள் யாருக்கு? எவ்வளவு? எப்படி? எந்த நேரத்தில்?

கல்சியம் மாத்திரைகள் யாருக்கு? எவ்வளவு? எப்படி? எந்த நேரத்தில்?


“நீங்கள் கல்சியம் குளிசை ஒவ்வொரு நாளும் போட வேண்டும்” என மருத்துவர்கள் ஆலோசனை கூறினால், “நான் ஏற்கனவோ தினமும் போடுகிறேன்” என்று

அல்லது, “மேலதிக கல்சியம் சேர்க்கப்பட்ட பால்மா குடிக்கிறேன்” என்ற மறுமொழிதான் இப்பொழுது கிடைக்கிறது.


ஆம்! இன்று நடுத்தர வயதைத் தாண்டிய பெண்கள் பலரும் உபயோகிக்கும் மருந்து வகைகளில் மிக முக்கியமானது கல்சியம்தான்.



தாமாகவோ அல்லது ஊடகங்களில் வெளியாகும் விளம்பரங்களாலும் தூண்டப்பட்டோ உபயோகிக்கிறார்கள். ஊடகங்களில் மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளைத் தொடர்ந்து உபயோகிக்க ஆரம்பிப்பவர்களும் உள்ளனர்.

எவ்வாறெனிலும் மாதவிடாய் நின்றபின் ஹோர்மோன் செயற்பாடுகள் குறைவதன் காரணமாக ஏற்படும் ஒஸ்டியோபொரோசிஸ் (osteoporosis)நோய்க்கு கல்சியம் பற்றாமை ஒரு முக்கியமான காரணமாகும் என்பதை பலரும் உணர்ந்துள்ளது வரவேற்கத்தக்க விடயம் என்பதில் சந்தேகம் இல்லை.


எலும்புகளின் அடர்த்தி குறைவதுதான் ஒஸ்டியோபொரோசிஸ் நோயாகும். இந் நோயிருந்தால் எலும்புகள் உடைவதற்கான சாத்தியம் அதிகமாகும். வயதானவர்கள் பலரினதும் எலும்புகள் அடர்த்தி குறைவதனாலேயே அவர்களுக்கு எலும்பு முறிவு (Fracture) அதிகளவில் ஏற்படுகிறது.

எவ்வளவு கல்சியம் உபயோகிக்க வேண்டும்? பகலிலா இரவிலா எடுப்பது நல்லது? சாப்பாட்டிற்கு முன்னரா பின்னரா? போன்ற பல சந்தேகங்கள் பாவனையாளர்களுக்கு எழுவதுண்டு.

கல்சியம் என்பது ஒரு கனிமம். இது கார்பனேட், சிற்ரேட், லக்டேற், குளுக்கனேட் (carbonate, citrate, lactate, gluconate) போன்ற ஏதாவதொன்றின் கலவையாகவே கிடைக்கிறது. கல்சியம் குறைபாடுள்ளவர்களுக்கு பொதுவாக 500 மி;கி முதல் 1200 மி;கி வரையான கல்சியம் தினமும் மேலதிகமாகத் தேவைப்படும்.

எடுப்பது கல்சியம் கார்பனேட் மாத்திரையாயின் அதனை உணவுடன் சேர்த்துச் சாப்பிடுவது மேலானது. ஏனெனில் உணவு உண்ணும் போது சுரக்கும் அமிலமானது கல்சியம் குடலால் உறிஞ்சப்படுவதை ஊக்குவிக்கும். கல்சியம் கார்பனேட் மாத்திரைகள் விலை குறைந்தவை.

கல்சியம் சிற்ரேட் மாத்திரையாயின் வெறும் வயிற்றிலும் சாப்பிடலாம், அல்லது உணவுடன் சேர்த்தும் சாப்பிடலாம். அமிலம் குறைந்த நிலையிலும் இது இலகுவாக உறிஞ்சப்படுவதால், இரைப்பை புண்களுக்காக ஒமிபிரசோல் (Omeprazole) போன்ற மருந்துகள் உபயோகிப்பவர்களுக்கும் உகந்தது. மலச்சிக்கல், வயிற்றுப் பொருமல் ஆகியவற்றை ஏற்படுத்துவது குறைவு. ஆனால் சற்று விலை கூடியது.

கல்சியம் லக்டேற், கல்சியம் குளுக்கனேற் போன்றவை அடர்த்தி குறைந்தவையாதலால் மேலதிக கல்சியம் தேவைப்படுபவர்களுக்கு போதுமானவை எனக் கூறமுடியாது.

இவற்றை காலை, மாலை, இரவு ஆகிய எந்த நேரத்திலும் சாப்பிடலாம். இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் மாத்திரைப் பெட்டியில் உள்ள குறிப்புத் துண்டினைப் பார்க்கவும். ஆயினும் ஒரு நேரத்தில் 500 மி;கி(mg) ற்கு மேற்பட்ட அளவில் எடுப்பது நல்லதல்ல. ஏனெனில் 500 மி;கி க்கு மேல் எடுக்கும்போது கல்சியமானது உணவுக் கால்வாயால் உறிஞ்சப்படுவது குறைவாகும். எனவே உங்கள் தினசரித் தேவை 1000 மி;கி எனில் அதனை 2 அல்லது 3 தடவைகளாளகப் பிரித்து எடுப்பது உசிதமானது.

அத்துடன் ஏனைய மருந்துகளுடன் சேர்த்து எடுப்பதுவும் நல்லதல்ல. முக்கியமாக நுண்ணுயிர் எதிர் மருந்து (Antibiotic), உயர் இரத்த அழுதத்திற்கான மருந்துகளுடன் ஒரே நேரத்தில் சேரத்து உட்கொள்ளவும் கூடாது. ஏனெனில் அவை உறிஞ்சப்படுவதை கல்சியம் பாதிக்கும். இதனால் இம் மருந்துகள் தேவையான அளவு பலனைக் கொடுக்கமாட்டா.

கல்சியம் மனிதர்களுக்கு நாளாந்தம் தேவைப்படுகிறது. ஆயினும் குழந்தைப் பருவத்திலும், வளரிளம் பருவத்திலும், முதுமையிலும் இதன் தேவை அதிகரிக்கிறது. இளமையில் எலும்புகள் வளர்வதால் அதனை ஈடு செய்யவும், முதுமையில் எமது உடலானது கல்சியத்தை உறிஞ்சுவது பாதிப்படைவதாலும் அதிக கல்சியம் எடுக்க நேர்கிறது.

எமது நாளந்தத் கல்சியத் தேவையை நாம் பொதுவாக பால், பால்மா, யோகொட், தயிர், கீரை வகைகள் ஆகியவற்றிலிருந்து பெற்றுக் கொள்கிறோம்.
பாலிலும், ஏனைய பாற் பொருட்களிலிலும் உள்ள கல்சியம் மிக இலகுவாக உறிஞ்சப்படுகிறது

கல்சியம் பற்றிப் பேசும்போது விட்டமின் டி (Vit D) பற்றியும் அறிந்திருப்பது நல்லது. எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும், கல்சியம் சிறப்பாக உறிஞ்சப்படுவதற்கும் விட்டமின் டி எமது உடலுக்குத் தேவை. தினமும் 400 முதல் 800 யுனிட் தேவைப்படுகிறது. அதனையும் நாம் பொதுவாக பாற் பொருட்களிலிருந்தே பெற்றுக் கொள்கிறோம்.

சூரிய ஒளியும் விட்டமின் டி யைக் கொடுக்கிறது. தினமும் 15 நிமிடமளவு சூரிய ஒளி பட்டால் போதுமானது.மத்திய தரை ரேகைக்கு அருகில் வாழும் எம்போன்றவர்களுக்கு போதிய வெயில் கிடைப்பதால் இது பாரிய பிரச்சனை அல்ல. மேலைநாட்டவர்கள் மற்றும் அங்கு வாழ்பவர்களுக்கு சூரியக் குளிப்புச் செய்தால்தான் இயற்கையாகக் கிடைக்கும்.

இப்பொழுது பெரும்பாலான கல்சியம் மாத்திரைகளில் விட்டமின் டி யும் சேர்க்கப்பட்டுள்ளது.

“ஆண்களுக்கு கல்சியம் மாத்திரைகள் தேவையா?” பலர் என்னிடம் கேட்கும் கேள்வி இது. பெண்களைப் போலவே ஆண்களுக்கும் வயதாகும்போது கல்சியம் உறிஞ்சப்படுவது குறைவடைகிறது. இதனால் எலும்பின் அடர்த்தி குறைகிறது. ஓஸ்டியோபொரோசிஸ் ஏற்படுகிறது. இந் நிலையில் அவர்களும் விழுந்தால் உடைவுகள் ஏற்படுவது நிச்சயம். எனவே அவர்களுக்கும் கல்சியம் நிச்சயம் தேவை.

ஓஸ்டியோபொரோசிஸ் ஏற்பட்டிருக்கிறதா என்பதை கண்டுபிடிப்பதற்காகச் செய்யப்படும் Dexa Scan பரிசோதனையை இப்பொழுது இலங்கையிலும் செய்துகொள்ள முடியும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
குடும்ப மருத்துவர்

நன்றி:- தினக்குரல்

உயிரின் ஓசை


உயிரின் ஓசை

உயிரின் ஓசை

மென்விரல்களால் உன் இதயம்
தொட்டேன் முன்பொரு பனிக்காலத்தில்.
பகிர்வுகள் ஏதுமற்ற என்னுலகில்
அன்பின் காரணங்கள் சொல்லி நுழைந்தாய்..
நீயொரு தேவதையென்றும் தெய்வப்பெண்ணென்றும்
பாசாங்கான சொற்களை இட்டு நிரப்பினாய்..
பட்டுத் துளிர்ந்த வெண்மைவெளிகள் இற்றுப்போயின
பின்னொரு கடும் கோடைக் காலத்தில்...
விசும்புகின்ற உயிரின் சப்தங்களை புறந்தள்ளி
புரிதலற்ற பார்வைகளால் பிரிந்து செல்கிறாய்..
விளிம்பில் ததும்பி நிற்கும் என் நீர்த்துளிகள்
காலநதியில் பிரவாகமாகி பெருவெள்ளமாய் நீள்கிறது
வெகு தூரத்தில் எங்கோ ஒரு மோகமலர்
உதிரும் சத்தம் சன்னமாக கேட்கையில்
மெல்ல இருள்கிறது என் வானம்...

தீண்டும் இன்பம்

உயிர் திளைத்த நொடிகளில்
எழவே முடியாத ஆழத்துக்குள்
ஒவ்வொரு முறையும் அப்படியேக் கிடக்க
ஆசைப்படுகிறோம்...
அமுதாகவும் ஆலகால விஷமாகவும்
ஆகிப் போகிறோம் சில போழ்துகளில்...
தீத் தீண்டும் இன்பக் கணங்கள் யாவையும்
சேர்த்து வைத்துக் கொள்ள ப்ரியப்படுகிறோம்...
எல்லாம் தீர்ந்து விலகிய பின்....
அவரவர் போர்வைக்குள்ளிருக்கும்
ரகசியக் கனவுக்குள் புதைந்து கிடக்கிறோம்!


சொற்கள் காத்திருக்கின்றன

காதல் தீர்ந்து போன ஒரு பின்னிரவை
கடந்து போக நினைத்து தோற்றுக் கொண்டிருந்தேன்..
இருள் சூழ்ந்த மரத்தின் அடியில்
ஏதோ ஒன்றின் சத்தம்
கசிந்து வந்தது கதவுகளின் வழியே
ஒரே இரவில் பாலைவனமென
மாறிவிட்டது முடிந்து விட்ட என் தீராக் காதல்!
இயலாமையுடன் தீர்ந்துவிட துடித்தன
என் தனிமையின் காலங்கள்!
ஒரு கவிதைக்காகவும்
இன்னும் ஒரு காதலுக்காகவும்
மேலும், சொற்கள் காத்திருந்தன!

(‘உயிர் எழுத்து’ மார்ச் 2009 இதழில் வெளிவந்த கவிதைகள்)

non muttum illa eallame ippadithan

குளிக்க மறுக்கும் குட்டிகள்!!

குளிப்பது எல்லோருக்கும் பிடித்த விசயமா? இங்கே பாருங்கள் இந்த குட்டிகளின் குளியல் ஆட்ட்த்தை!!!

1.அய்யய்யோ!!! காப்பாத்துங்க!!

2.புசு புசுன்னு இருந்த என்னை இப்படி ஆக்கிட்டானுங்க!!

3.என்னைய விடுங்க!!! அப்புறம் குளிக்கிறேன்!!

விட மாட்டேங்கிறீங்களே!

4.நான் கலையில் தான் குளித்தேன் என்றால் நம்புங்கப்பா!!

5.கையெடுத்துக் கும்பிடுறேன்!! அந்தத் தொகுதியில் நான் நிக்கலை!! என்னைய விட்டுடுங்க!!!

6.எனக்கே குளியலா? வர மாட்டேன்!!

7.எப்படி நடுங்குது பாருங்க எனக்கு!!!

8.இப்படி கொடுமை பண்றாங்களே! யாராவது காப்பாத்துங்க என்னை!! ப்ளூகிராஸைக் கூப்பிடுங்கள்!!

என்ன நான் அனுப்பியிருக்கும் படங்களை உங்க குழந்தைகளிடம் காட்டலாம்!!! குளியல் வேலை ஈஸியா முடியும் பாருங்க!!!

Tuesday, March 17, 2009

Whatever Happens Life Should Go On....

A nice Story...........

Hi All,

Below is a story that was written by an IT employee in a "short story

contest"...

It’s a story of a Brahmin gal who loved a non-Brahmin and due to father’s

compulsion married a Brahmin guy and leading a perfect life with little

happiness!!

This may be a story written in a contest, but the content, characters and

the sentences of the story were "Heart Throbbing" and "Breath Taking"...

Please do read it completely, it takes around 15 mins... But, I say, its

really worth reading this story... This may even lead to a change of

attitude or the character or the mindset in you, in the future...

(Some tamil words included)...

Hi folks, here's my entry to the much talked about short story

contest. The story is not short though, I apologise!

When I thought of this story, I envisaged it and almost started

writing this in Tamil but only then did I realise that my written

Tamil is not upto the mark. ( Well, am not claiming my English is

excellent, but it's relatively better than my Tamil) In fact, even

after I finished writing it, I still felt the story belongs to

Tamil!! Will mail it to my aunt and get it reincarnated in Tamil.

Pssst, the most operative name in this story, I ripped from Thevar

Magan (Embedded image moved to file: pic25493.gif);)It somehow

signified a lot to me!

Dearest Appa,

27th Jan'1965

Hope this letter finds you, Amma, Raji and Seenu in good health. The

weather here in New York City is icy cold. But Avar sollraar- I have

missed this winter's biting cold. I still wish I had seen the snow…

But then, I still wish I had not left Trichy at all. I do miss

Trichy, Appa. You, Amma, Raji, Seenu, pakkatthaathu Rama, Vikatan,

Ucchi Pillaiyaar Koil, filter coffee, Holy Cross College, the Physics

Department and of course Sakthi. I know you wish I hadn't brought his

name in this letter.But not to worry Appa, I understand that you got

me married to Visu because you thought it was best for your daughter.

I still remember Amma wiping her silent tears with her madisaar

thalappu and you shouting at me the day I told you about Sakthi.

Later, when the initial shock wore off you patiently listed umpteen

reasons why I should not marry Sakthi. I agree Appa, that 20 is too

young to decide, that Raji and Seenu would have been affected greatly

by my 'mistake', the Agrahaaram would have scoffed at you… a meat

eater was not a good match for someone who had never even tasted

onion and garlic. The reasons were innumerous. I knew you'd still

have objected and offered other reasons even if he had become a

Dhigambara monk. Visu on the other hand, wore a poonal, he is the son

of Neelakanta Sastri, an Engineer and he researched about computers

which is what made you jump for this alliance. Am not complaining

Appa, Visu is a nice man.

Tell Amma that I could not try her kozhakkattai recipe this Pongal

because coconuts were too expensive and Avar nenacchar that it was

ridiculous. Anyway, we went out on Sankaranthi day and dined out. He

thought it would be a good idea to invite the Chatterjees also. But I

didn't speak Bengali and Mrs.Chatterjee spoke English in an accent

that comes with living years in America. Hence I made myself busy

with the menu card. They ordered various species of fish,shrimp and a

lot more of items I had never seen in my life. I ordered orange juice

and a sandwich. The other diners thought it was queer coming to a

seafood restaurant and settling for a sandwich. That day, I learnt

that Avar prefer pannradhu beef, pork, bacon and seafood. Do you

know, Appa… Sakthi gave up meat because of me? I didn't ask, he just

did. But then, Sakthi is not Neelakanta Sastri's son and that made it

imposible for Subramania Iyer's daughter Kalyani to marry him.

I will keep you posted on what happens here. I don't think I can make

it to Seenu's Upanayanam. Tell Amma not to get me a pattu podavai for

the poonal, I don't use them here. I wore it once and felt like a

clown here.

Your loving daughter,

Kalyani.

Dearest Appa,

20th Oct'1968

We are fine here. Gautam is speaking his first words and I swear they

sounded like 'Dosai'. But Visu claims it's just gibberish. From your

previous letter, I gather that pakkathatthu Rama is married and

settled in Jamshedpur. Nice to know that. Please find out her address

from Saarada maami and write it to me. I want to keep in touch with

her. I hope Raji is happy with her husband in Madras. I spoke to her

last month, great to know that she has a phone. Do tell Seenu to

study well and prepare for his school final exams. Raji also told me

that Sakthi is married now. I wish him good luck, but I could not

convey the message to him. Raji refused to be the messenger and I

know you have severed ties with Sakthi's father, your long term

friend Sankaravel, thanks to me. I hear his wife is his cousin… He

must have succumbed to his mother's wishes.

How did Avani Avittam go? Visu's mother gave me a bunch of new

poonals for Avani Avittam but Visu was in Boston that day. He

wouldn't have used it anyway, I haven't seen him wear one in the last

three years. Gautam is now playing with the spool of thread- mere

thread it is, what else can I call it? Gautam will not even know what

it signifies, I guess. Visu is making sure Gautam grows up listening

to English only. He says it will make his life easier. But I do read

out passages from Ponniyin Selvan and Bharathiyaar's poetry when I am

alone with him. It's more of reading to myself, I guess. I actually

got that poetry book as a present from Sakthi, it still has his

scrawling signature in the first page.

By the way, Visu saw that book and asked me about Sakthi, I told him.

Hold your breath Appa, he didn't throw me out of the house. He is a

good man, no question. He said it is okay and that he doesn't mind.

And then he told me of his American girlfriend whom he was once in

love with, when he first reached America- Amy, a fellow Researcher

who was in a brief relationship with Visu when she was in New York.

They lived together for 3 months and decided against marriage,

somehow. Amy once dropped home when she was in New York. Nice lady,

she was.

Ask Amma to send me Sambar Podi for this whole year. My friend Sudha

is coming to Madras next week. Ask Seenu to catch the Rockfort

Express and give it to her. I will collect it from her here.

Your loving daughter,

Kalyani.

Dearest Appa,

3rd June'1974

We have arrived here safely. After two months in India, I find it

hard to adjust back to normal life here. Gautam and Ranjana demand

vadai,paayasam and vaazhai ilai here. Visu's relieved to be back in

America. I left a set of my books there. If it's not in Trichy it

must be in Visu's parents' place. If you find them, safeguard them

until my next trip. They mean a lot to me since they were gifts from

Sakthi. By the way, Appa, I found out Sakthi's present address in

Madras from Rama and Saarada maami. I wrote to him. I am extremely

proud to know that Dr.Sakthivel is a cardiologist much in demand

there in Madras. He was thrilled to hear from me after so long. You

know what he has named his daughters? Kalyani and Raagamaalika.

He called me. You know what, he's still a practising vegetarian,

Appa. He didn't revert back just because he lost me… He asked me if I

still sang and whether Gautam and Ranjana could sing. I could see a

proud father in him, when he claimed his daughters could sing upto Ra

ra Venu Gopala. That's when I remembered that I was once a good

singer. I wonder why I stopped singing, wonder why I never exposed

the kids to Music and Dance. But then, I realize that I had buried

all that deep inside me when I left Trichy; after bidding farewell to

my best Rasika, actually. Sakthi. After the call, I tried singing

'Kurai Onrum Illai'. I could not rquite reach Charanam, because of

the lack of practice and more importantly because of the tears that

filmed my eyes and the constriction in my throat. I sang to Visu and

the kids one of these days. Though Gautam was impressed, father and

daughter could not just wait for me to finish!

By the way, next time some friend comes to India, send me a Sruthi

Box. I would like to start singing again.

Your loving daughter,

Kalyani.

Dearest Appa,

14th Aug 1978

Just back after our tour to California. Find our photos, picture

postcards attached herewith. After you are done with showing all

family members,relatives, friends and neighbours, pass them to Visu's

parents. It was a welcome break for the four of us. But I missed my

paattu class students all along and was happy to resume the classes

again last evening. Did I mention in my previous letter, before we

left on the tour - I finally got my driving license here. I sent a

few photos to Sakthi too. He has sent me quite a few records and

cassettes. I loved it! I'm reminded of AIR, almost! I'm circulating

them among my friends too. And of course, playing them for my

students too. They are picking up beautifully. Funny news is, I, a

Tamilian, is teaching Telugu and Sanskrit kritis to a cross section

of Tamil, Malayalam, Kannada,Telugu, Marathi, Bengali students in an

English speaking nation.

The music sessions have resulted in a reborn Kalyani, Appa. Thanks to

Sakthi, really. I would have never taken it up had it not been for

his reminder. I am now thinking of what life would have been like if

I had indeed married him. I would have of course lost you and Amma.

But right now, with this life in America, Visu and these monthly

letters to you, Rama, Raji and Seenu what have i gained? I don't

find an answer, Appa. Neither do I think I ever will. Again, as I

have always reiterated, Visu is a good man, no complaints there. He

is every bit the son in law you wanted. Researcher, American Post

Graduate Degree holder, a dutiful husband and father,earning a

comfortable income. I know it is too much to ask for anything else.

That is a fantasy I left midway in my life… Once upon a time in

Trichy with someone else.

Your loving daughter,

Kalyani.

Dearest Appa,

14th Apr'1984

Met Dr.Sakthivel after 19 years… He had come to

New York for business purposes and paid me a visit. Visu and the kids

welcomed him home with great pleasure. And they liked him too. In

fact, they did most of the talking initially. And of course, he got

me a whole load of books, cassettes, Mysore Paak and lots more.

Your loving daughter,

Kalyani.

Dearest Appa,

20th Jan' 1990

I just went through all these letters lying in my closet draw for

years together. These are letters I started writing to you and then

decided not to post. For obvious reasons. I could not mention Sakthi

to you even though I was itching to. Not because I was afraid to

invite your wrath. I just did not have the heart to hurt you, I know

these letters would have hurt you. Because deep inside, I know you

were disturbed- you knew Sakthi was a good man, you knew he was a man

of substance, yet you didn't want to go further. Society, I know.

Family… I know… And all these letters would have only wounded you

more. Today, 2 years after your death, and 6 months after Dr.

Sakthivel's untimely death in a road accident, I somehow felt like

re-reading all these letters. To me, all these unstamped, unposted

letters mean a life that could have been.

Kalyani Viswanathan.