இலக்கியம்
பெரியகுல ஆதீனப் புலவர் மகன் க. பழனிச்சாமி புலவர் பதிப்பித்த அலகுமலைக் குறவஞ்சியில் வேளாளர் குடியேற்றம் பின்வருமாறு வருணிக்கப்படுகிறது.
குருத்தணி சோழன் குறைவிலா தீன்ற
உருத்திர மணியன் உடனக மகிழந்து
மணம்புரிந்து உலகில் வாழ்ந்திடும் நாளில்
குணமுடன் மகட்கும் குருத்தணி சோழன்
சீதன வரிசை சிலபொரு ளுதவும்
போதினில் மகளும் பொருந்தியுள் மகிழ்ந்து
தந்தை தன்னுடனே சாற்றிய வசனம்
நந்தலில் லாத நாற்பத் தெண்ணாயிரம்
நற்குலத்தாரில் நாலிரு ஆறாம்
நிற்கிரி கடனே நீடூழி காலம்
மதியுடன் எங்கள் மன்சபைக் சமூகராய்
இதமுடன் இருக்க ஏகுவீர் என்னக்
கூறவும் மகிழ்ந்து குருத்தணி சோழன்
சேரமா னுடனே செப்புவர் சிறப்பாய்
மகளுரை மறவா வாய்மையால் யானும்
வகையுடன் வேளான் மரபுளோர் அனுப்பில்
உங்களோ டொப்ப வுயர்ச்சியாயப் பார்க்கில்
அங்குயா னனுப்ப அகம்சம் மதிப்பேன்
என்றவர் சொல்ல வேசேர மானும்
நன்றவர் நமது நாடதி பதியாய்
வரிசைமெய்ப் புகழுடன் வழங்குவே னெனவும்
சரிசரி யெனவே தரணி பாலகரில்
கண்ணன் ஆனங்கூர்க் காணி முத்தையனை
மன்னவர் சபையில் வரவழைத் தேதான்
எண்ணா யிரங்கோத் திரத்துளோர்க் கரசன்
நண்ணாக் கொங்கு நாடதை விளக்கும்
செய்து கானிருப்பீர் சென்மென அனுப்ப
உய்யவே சேர னுலகுக்கு வந்தார்.
இங்கு மாதிரிக்காக ஒரு பட்டயமும், இலக்கியச் சான்றுமே காட்டப்பட்டன. நமக்குக் கிடைக்கும் எல்லாச் சான்றுகளும் சோழ நாட்டிலிருந்து வேளாளர்கள் கொங்கு நாடடுக்கு குடியேறியதாகக் கூறுகின்றன. மதுக்கரைச் செல்லாண்டியம்மன் கோயிலில் மூவேந்தர் இருக்கும் போது அவர்கள் ஆதரவு பெற்றுக் காவிரி, அமராவதி, நொய்யல், பவானி ஆற்றங்கரை வழியாகக் கொங்கு நாடெங்கணும் சென்று காடு கொன்று நாடாக்கிக் குளம் தொட்டு வளம் பெருக்கிக் கொங்கு நாட்டை வள முறச் செய்த வேளாளர் கொங்கு வேளாளர் ஆயினர்.
இல்லத் திருமணச்சீர்கள்
- தம் மக்களுக்கு மணம் முடிக்க பெற்றோர் பருவம் பார்த்தல்
- மணமக்களுக்கு பொருத்தம் பார்த்தல்
- வாசல் கவுலி குறிப்பு கேட்டறிதல்
- மாப்பிள்ளை வீட்டார் நிச்சயார்த்தம் மூலம் பெண்ணை உறுதி செய்தல்
- அருமைப் பெரியவர்களுக்கு தாம்பூலம் வழங்குதல்
- திருமணநாள் குறித்து பெண் மடியில் வெற்றிலை கட்டுதல்
- தட்டார் பூட்டும் தாலிக்கும் பொன்னோட்டம் பார்த்தல்
- மணநாள் குறித்து தேன்பனை ஓலை எழுதல் (பத்திரிக்கைக் அச்சடித்தல்)
- முகூர்த்த நெல் போட்டு வைத்தல்
- விறகு வெட்டி பிளந்து மூன்று கத்தையாகக் கட்டுதல்
- சம்மந்திகள் உப்புச்சக்கரை மாற்றி சிகப்பு பொட்டு வைத்தல்
- மாப்பிள்ளை வீட்டில் பருப்பும் சோறும் விருந்துண்ணல்
- பதினெண் கட்டுக் கன்னிகளுக்ளூக்குத் தாம்பூலம் கொடுத்தல்
- பெண்ணெடுக்கும் மாமனுக்குத் தாம்பூலம் வழங்குதல்
- இணைச்சீர் செய்யும் சகோதரிக்கும் தாம்பூலம் வழங்குதல்
- பெண் கூரைச்சேலை சோமான் உருமாலை வாங்குதல்.
- பெண் வீட்டில் பந்தல் போடுதல்
- மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டிற்குப் புறப்படுதல்.
- எழுதிங்கள்காரர், மூத்தோர் வீடுமெழுகுதல்.
- எழுதிங்கள் சீர்சாமான்கள், நிறைநாழி, முக்காலி, மண்மேல்பலகை பேழைக்கூடைசீர், படி விநாயகர்பூஜை சேகரித்து வைத்தல்
- விரதவிருந்து
- மணமகள் வீட்டார் சீர்தண்ணீர் கொண்டுவருதல்
- முகூர்த்தக்கால் வெட்டி வர மணமக்களின் வீட்டார்கள் பால் மரத்திற்கு பூஜை செய்தல்
- வினாயகர் பூஜையுடன் மாப்பிளை வீட்டார் முகூர்த்தக்கால் போடுதல்
- பசுமாட்டு சாணத்தில் தரைமெழுகி பிள்ளையார் பிடித்து அருகு சூடுதல்
- மணமகன் வீட்டில் வெற்றிலை மூட்டை கட்டுதல்
- மணமகள் வீட்டில் சீர்தண்ணீர் கொண்டு வருதல்
- கணபதி பூஜையுடன் பெண் வீட்டார் முகூர்த்தக்கால் போடுதல்
- வெற்றிலைக் கூடையை பேழைக்கூடையில் வைத்து பூஜை செய்து பெண் மடியில் 30 வெற்றிலை கட்டி கணபதியை கும்பிடுதல்
- மணமக்கள் வீட்டார் மணநாள் குறித்தல்
- மாலை வாங்கல்
- சிறப்பு வைத்தல், கரகபானை புடச்சட்டி வாங்குதல்
- மேல்கட்டு கட்ட கட்டுக்கன்னிக்குத் தாம்பூலம் வழங்குதல்
- பிரமன் பூஜை செய்து மணமக்களை வீட்டிற்கு அழைத்து வருதல்
- மணமகளுக்குத் தண்ணீர் வார்த்தல்.
- மணமகனுக்கு முகவேலை செய்ய குடிமகனுக்கு தாம்பூலம் வழங்குதல், மணமகனுக்கு முகம் வழித்துத் தண்ணீர் வார்த்தல்
- மணமகனுக்கு ஆக்கைப் போட்டு தண்ணீர் வார்த்தல்
- மணமக்களுக்கு பட்டினி சாப்பாடு போடுதல்
- குலதெய்வத்திற்கு குப்பாரி போடுதல்
- கங்கணம் கட்டுதல்
- நாட்டுக்கல் சீர் செய்தல்
- மணமகனுக்கு செஞ்சோறு சுற்றி எரிதல்
- இணைச்சீர் மணவறை அலங்காரம் மடியில் வெற்றிலை கட்டுதல்
- மங்கள வாழ்த்தை குடிமகன் சொல்லுதல்
- அருகுமணம் எடுத்து வாழ்த்துதல்
- தாயார் மகனுக்கு தயிர் அன்னம் ஊட்டுதல்
- மகன் தாயை வணங்கி, ஆசிபெற்று பூங்கொடிக்கு மாலை சூடல்
- மணமகன் குதிரைமேல் செல்ல மடத்தான் குடைபிடித்தல்
- நாழி அரிசிக்கூடை
- மாப்பிள்ளையை விடுதி வீட்டிற்கு அழைத்துச் செல்லல்
- பொன்பூட்ட வந்தவருக்கு பூதக்கலம் தான் படைத்தல்
- தாய்மாமன் பால்பழம் உண்ணல்
- மாமன் பொட்டிட்டு பொன்முடித்து பட்டம் கட்டி பெண் எடுத்தல்
- வாசல் படியில் நெல் போடுவது
- மணவறை அலங்காரம்
- மணமக்களை அலங்கரித்தல்
- மணமக்களை மணவறைக்கு அழைப்பது
- சூரிய நமஸ்காரம் செய்து மணமகள் மணமகனின் கால் கழுவுதல்
- மண்மேல் பணம்
- ஓமம் வளர்த்தல்
- மாங்கல்யத்திற்கு கணபதி பூஜை செய்தல்
- வெண்சாமரம் வீசுதல்
- தாசி சதுராடுதல்
- மணமகன் மணமகளுக்கு மாங்கல்யம் அணிவித்தல்
- பெரியோர்கள் ஆசிகூறல்
- மைத்துனர் கைகோர்வை
- மங்கள வாழ்த்து குடிமகன் சொல்லுதல்
- அருகுமணம் எடுத்து வாழ்த்துதல்
- மணமகளுக்கும் மணமகனுக்கும் கங்கணம் அவிழ்த்தல்
- பாத பூஜை
- தாரை வார்த்தல்
- குங்குமம் இடுதல்
- ஆரத்தி எடுத்தல்.
- மணமக்கள் மணவறையைச் சுற்றி வருதல்
- மணமக்களை இல்லத்திற்கு அழைத்தல்.
- உள் கழுத்துதாலி அணிதல்.
- மொய்காரி.
- பரியம் செல்லுதல்.
- ஊர்பணம்.
- கூடைச்சீர்.
- பந்தல்காரி செலவு.
- மணமகனுக்கும் மணமகளுக்கும் தண்ணீர் வார்த்தல்.
- மணமக்களுக்கு புதுப்புடவை, சோமன் உருமாலை தரல்.
- மணமகனுக்குச் மணமகள் தட்டுவாச்சாதம் போடுதல்.
- மணமன் மோதிரத்தை மைத்துனன் பிடுங்குவது.
- கரகம் இறக்குதல்
- மாப்பிள்ளை வீட்டில் பெண் காண்பது.
- மணமக்களு தாயார் பால் அன்னம் ஊட்டல்.
- மணமக்கள் விநாயகர் கோயிலில் வழிபடல்.
- மணமக்களுக்கு மிதியடி அணிவித்தல்.
- பெரியோர்களை தம்பதிகள் கும்பிட்டு மஞ்சள் நீராடுதல்.
- வினாயகருக்கு மடக்கில் பானைப்பொங்கள் வைத்தல்.
- வினாயகர் கோயிலில் சம்மந்தம் கலக்குவது.
- மணமகள் எடுத்தமாமனுக்கு விருந்து வைத்தல்.
- புலவர் பால் அருந்துதல்
- மாமன் சீர்வரிசை.
- பெற்றோர் மணமக்களுக்கு சீர்வரிசை
- மணமக்களை மணமகன் வீட்டிற்கு அழைத்துச்செல்லல்
- மணமகள் ஊர் கிணற்றில் தாம்பூலம் விட்டு தண்ணீர் கொண்டு வருதல்
- மணமக்களுக்குத் தண்ணீர் வார்த்தல்
- மணமகள் விளக்கு ஏற்றுதல்
- மணமக்களை பெண்வீட்டிற்கு அழைத்து வருதல்
- சாந்தி முகூர்த்தம்
- மாக்கூடை கொண்டு செல்லுதல்
- மணமகன் சகோதரி மணமக்களை மணமகன் வீட்டிற்கு அழைத்து வருதல்
- குலதெய்வ கோயிலுக்கு கல்யாணபடி கொண்டு செல்லுதல்
- மணமகள் வீட்டில் மணமகனுக்கு எண்ணெய் நீர் குளிப்பாட்டி விருந்து வைத்தல்
- மணமகன் சகோதரி மணமக்களுக்கு விருந்து வைத்தல்
கொங்குவேளாளர் குலங்கள்
கொங்குவேளாளர் குலங்கள் 60, 90 என வளர்ந்து தற்போது 142 ஆகியுள்ளன. அழகுமலைக் குறவஞ்சி 18ஆம் நுற்றாண்டுக்குரியது. இதில் 142 குலங்கள் பற்றி பட்டியல் அமைந்துள்ளது. மரத்தின் கிளைகளாக பரந்து விரிந்து குலப்பெயர்களை அறியலாம்.
1. அந்துவன் 2. அஷரியன் 3. அக்கினி 4. அனகன் 5. அழகன் 6. ஆதி 7. ஆடை 8. ஆவன் 9. ஆந்தை 10. ஆதினை 11. ஆதித்தேயன் 12. இந்திரன் 13. உவணன் 14. உழுவர் 15. உறுகலன் 16. எண்ணெடுய் 17. ஒழுக்கன் 18. ஒதியன் 19. கண்ணந்தை 20. கருங்கண்ணன் 21. காளன் 22. கவுரி 23. கம்பன் 24. கரிஞ்சி 25. கட்செவியன் 26. கிள்ளியன் 27. கும்பன் 28. கொண்புரங்கி 29. கோதர் 30. குழாயர் 31. கோரவந்தல் 32. காரி 33. கணவாளன் 34. கோரக்சன் 35. குண்டரி 36. குணக்கர் 37. குணியன் 38. குண்டாலி 39. கூரை 40. கீரை 41. குயிலர் 42. குங்கரி 43. கூறுபன் 44. கோதனு 45. சங்கர் 46. செங்பூத்தான் 47. சாத்தந்தை 48. செம்பூபொன் 49. செங்கன்னி | 50. சேகர் 51. சேரன் 52. சிலம்பன் 53. செல்வன் 54. சேடன் 55. சேரலன் 56. சூரியன் 57. சூலன் 58. சோதி 59. சன் 60. சவுறியன் 61. சோமன் 62. கூறுபன் 63. செவழன் 64. சாத்துவராயன் 65. சனகன் 66. தூரன் 67. தேவேந்திரன் 68. தோடை 69. தழிஞ்சி 70. தேமான் 71. தனவந்தன் 72. தக்கவ 73. நாரை 74. நச்சந்விழ 75. நிலன் 76. நந்தர் 77. நிருகை 78. பூசர் 79. பருகுவி 80. புத்தன் 81. பொடியன் 82. பூச்சந்தை 83. பதரி 84. பவமன் 85. பிறழாந்தை 86. பனையன் 87. பூந்தாரன் 88. பாண்டியர் 89. பயிரன் 90. பரமன் 91. பங்சமன் 92. பூதியன் 93. பிரமன் 94. பாலியன் 95. பாம்பன் 96. பொன்னர் 97. பாவலர் 98. பண்ணை | 99. பெருங்குடி 100. மாயவா 101. மாடை 102. மணியன் 103. முத்தன் 104. மூலன் 105. மாதங்கன் 106. மொய்மன் 107. முழுக்காதன் 108. முவர் 109. வாச்சர் 110. வேந்தன் 111. விளியன் 112. வெளையன் 113. வாணவர் 114. பிரவுளன் 115. விரதன் 116. விலோசணன் 117. வீரன் 118. வொளம்பர் 119. காடர் 120. கோவர் 121. பொருர்விழ 122. செங்கண்ணன் 123. வண்ணக்கன் 124. வில்லி 125. விவிழி 126. மேதி 127. நேரியன் 128. மீனவன் 129. வெண்டுவன் 130. மாதுரி 131. பைகரி 132. பழஅழகர் 133. துந்துமன் 134. கர்டன் 135. கொட்டாரம் 136. பனங்காடை 137. புண்ணை 138. சுரபி 139. வேணியன் 140. நெஸ்தலி 141. முனையன் 142. நெய்தல் |
தோற்றமும் குடியேற்றமும்
கொங்கு வேளாளர் தோற்றமும் குடியேற்றமும்
வீராட்சி மங்கலம் கந்தசாமிக் கவிராயர் அவர்கள் வேளாளபுராணம் என்னும் நூலை மிகவும் அழகிய கவிதைகளால் பெருங்காவியமாகப் பாடினார். அதில் வேளாளர் தோற்றம் பற்றி புராண ஜதீகங்களுடன் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
அந்நூலை அழகிய உரைநடை வடிவில் கோவை விளாங்குறிச்சி நா. மருதாசலக் கவுண்டர் அவர்கள் ஆக்கியளித்துள்ளார்கள். அதில் கீழ்வருமாறு வேளாளர் தோற்றம் கூறப்படுகிறது.
கைலாசத்தில் சிவபெருமான் வீற்றிருக்கும்போது நான் முகன் உலகத்தில் இறைவனால் படைக்கப்பட்ட வசதிகளை மக்௧ள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வில்லையே என்று முறையிட்டார். சிவபெருமான் நான் முகனிடம் திருமாலைச் சென்று பார்க்குமாறு பணித்தார்.
திருமாலிடம் நான்முகன் முறையிடும்போது போதாயன முனிவர் வந்தார். போதாயன முனிவரை அறிமுகப்படுத்தி அவரையே வேண்டிய ஏற்பாடு செய்யுமாறு திருமால் வேண்டினார்.
உண்ணத் தெரியாமல், உணவைப் படைக்கத் தெரியாமல் இருந்த உலகுக்குக் கங்கைத்தாயின் அருகேயுள்ள திருவேணி சங்கமத்திலிருந்து ஒரு மரபாளனை உற்பத்தி செய்து அவனுக்குச் சகல செய்திகளையும் கற்பிக்குமாறு போதாயனருக்குத் திருமால் ஆணையிட்டார்.
கங்கா தேவியின் சன்னிதானத்தில் மரபாளனைப் பெற்றுத் தன்னோடு இந்திரலோகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று போதாயன முனிவர் வேண்டினார்.
தான் பெற்ற மரபாளனை இரு கைகளாலும் பரிந்து எடுத்து உச்சிமோந்து ஆனந்த முத்தங்கள் தந்து பொன்னுலகு சென்று சிறப்பெல்லாம் பெற்றுப் போதாயனருடன் மண்ணுலகு செல்க மகனே என்று கங்காதேவி அனுப்பி வைத்தாள்.
இந்திரன் எல்லா இன்பங்களையும் குறைவறப் பெற்றிடுக என வாழ்த்தினான். இந்திரன் மரபாளனைச் சரியாசனத்தில் இருக்கச் செய்து பார் முழுதும் ஏர் முனையைத்தான் நம்பியுள்ளது.சகல பிணிகளிலும் தலையான பசிப்பிணியை தீர்க்க ௨ழவுவைத்தியத்தைத் தவிர வேறு உண்டோ? உழவுத் தொழில் இல்லாமல் உலகில் என்னதான் நடக்கும் இதற்கு இணையான தொழில் ஏதுமில்லை என்றான்.
இந்திரன், குபேரன் இவர்கள் பெண்மக்களை மணந்த மரபாளன் (வேளாளன்) பூமிக்கு வந்து பயிர்த்தொழில் செய்ய முற்பட்டான். கங்கையின் அருளால் தோன்றியமையால் வேளாளர் கங்கா குலத்தினர் என அழைக்கப்பட்டனர்.
அவ்வாறு தோன்றிய வேளாளர்கள் தொண்டை நாட்டிலிருந்து சோழநாடு வழியாகக் கொங்கு நாட்டில் குடியேறினார்கள் என்பதைப் பட்டயங்கள் பல கூறுகின்றன. பெரிய குலத்துத் தலைவர்கள் வேணாடுடையார் பட்டயம் கீழ்வருமாறு கூறுகிறது. பகிறிச் சோழன் ராசாவின் மகள் தனக்குச் சீதனம் கொடுத்த படியினாலேயே சேரமான் பெருமான் கொங்கு மண்டலத்துக்கு கொங்கு வேளாளார் என்று பெயரும் கொடுத்துப் பிடாரன் வேணுடையானுக்குப் பட்டாபிஷேகமும் சூட்டி எண்ணாயிரம் கோத்திரத்துக்குப் பெரிய கோத்திரம் எண்ணாயிரம் வீட்டுக்கும் பெரிய வீடு என்று கொங்கு மண்டலத்துக்கு அழைத்து வந்ததன் பேரில் இருளுறைந்த காண்டாவனம் எல்லாம் வெட்டிக் கிராமம் உண்டுபண்ணினான் என்பது பட்டயப்பகுதியாகும்.
கொங்கு நாடு
நம் செந்தமிழ் நாடு, சேர சோழ பாண்டிய நாடுகளைப் போலவே தொண்டை நாடு கொங்கு நாடு என்ற இரண்டு தனிப் பிரிவுகளை பழங்காலத்தில் தன்னகத்தே கொண்டிருந்தது.
கொங்கு நாடு தனக்கென்று எப்பொழுதும் தனியான எல்லைகள், வரலாறு, கலை, பண்பாடு, நாகரிகம், பழக்க வழக்கம், ஆகியவைகளைக் கொண்டது. இதனைப் பழங்கால இலக்கியங்களும், கல்வெட்டுக்களும் உறுதிப்படுத்துகின்றன. நீலகிரி, கோவை, பெரியார், கரூர், சேலம், தருமபிரி மாவட்டங்களில் சில பகுதிகளும், திண்டுக்கல் மாவட்டப் பகுதிகளும் கொங்கு நாடாகும்.
“ வடக்கே பெரும்பாலை வைகாவூர் தெற்கு
குடக்குப் பெருப்புவெள்ளிக் கன்று – கிடக்கும்
களித்தண் டலைமேவும் காவிரிசூழ் நாடு
குளித்தண் டலையளவும் கொங்கு”
என்பது தனிப்பாடல், கொங்கு நாட்டு எல்லை கூறும் எல்லாப் பாடல்களுமே வெள்ளியங்கிரி மலையை மேற்கு எல்லையாகக் கூறுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைக்கு தெற்கே சேரநாடு என்பது இதன் கருத்தாகும்.
அதனால் தான் தொண்டை நாடு, கொங்கு நாடு ஆகியவைகளைச் சேர்த்துத் தமிழ்நாடு ஐந்து என்ற கருத்து முன்பே இருந்தது, தண்டியலங்காரம் என்னும் நூலின் மிகப் பழமையான மேற்கோள் பாடல் ஒன்று.
என்று கூறுகிறது. சைவ சமய நூல்களில் மிகத் தொன்மையானதாகக் கருதப்படுகின்ற திருமந்திரம்.
என்று தமிழ் நாட்டின் ஐந்து பிரிவுகளைச் சுட்டிக் காட்டுகிறது. எனவே கொங்குநாடு தனிப்பிரிவு என்பது இவற்றால் புலப்படுகிறது. வரலாற்று ஆசிரியர்கள் பலரும் இக்கருத்தை ஏற்றுக்கொள்கின்றனர்.
சங்க இலக்கியத்தில் பல இடங்களில் கொங்கு நாடு தனி நாடாகவே குறிக்கப்படுகிறது. இந்நாட்டு மக்கள் கொங்கர் என்று சங்கப்பாடல்களில் கொங்கின் குறுநில மன்னர்கள் பலர் தனியாகக் குறிக்கப் பெறுவதுடன் கொங்கு நாட்டின் கால்நடைச் செல்வம், ஆழ்கிணறு, தண்ணீர்ப் பற்றாக்குறை, கொங்கரின் உழைப்பு, அவர்தம் போர்திறன் ஆகியவை பல்வேறு இடங்களில் பரக்கப் பேசப்படுகின்றன. மேலும் கொங்கு நாட்டு மணிகள், வண்ணகற்கள் வேலைப்பாடு மிக்க அணிகலன்கள் புகழ்ந்து பாராட்டப் பெறுகின்றன.
சேரன் செங்குட்டுவன், தனக்குச் சமமான அரசனாகக் கொங்கு நாட்டு இளங்ககோசரை தமிழ் நாட்டு மூவேந்தருக்கு ஒப்ப மதித்துப் போற்றியிருக்கின்றான் நூற்றுவர் கன்னர், இலங்கைக் கயவாகு மாளுவவேந்தர், சோழன் பெருங்கிள்ளி ஆகியோர் போலக் கொங்கு நாட்டு மன்னனையும் நட்பாகக் கொண்டிருக்கின்றான், இதனைச் சிலப்பதிகாரத்தின் மூலம் அறிகின்றோம்.
பேரூரை “மேற்குக் கொங்கு” என்று பாண்டியன் பழஞ்செப்பேடும் இலக்கியங்களும் கூறுவது கொங்கு நாடு தனி நாடு என்பதாலேயேயாகும், கொங்கு நாட்டிலிருந்து சமய அடியார்கள் சேரநாடு நோக்கிச் சென்றதை
“மலைநாடு கடந்தருளி.... திருமுருகன் பூண்டிவழிச் செல்கின்றார்”
என்று பெரியபுராணம் குறிப்பிடும். சிலப்பதிகாரத்திலும் கொங்கின் மேற்குப்பகுதி அரசர் குறிக்கப்பெறுகின்றார்.
நூற்றாண்டுகள் தோறும் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் கொங்கு நாடு தனி நாடெனக் கூறுகின்றன. சிலர் தொண்டை காட்டைச் சோழ நாட்டுடனும் கொங்கு நாட்டைச் சேரநாட்டுடனும் அடக்குவர், அது பொருந்தாது என்பது மேற்கண்ட சான்றுகளால் விளக்கும்.
‘கொங்கு நீ வரலாறு’ எழுதிய கோவைக் கிழார் தன் நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
“சோழர்கள், ஓயசளர், விசய நகரத்தார், மைசூர் மன்னர்கள் ஆகிய வம்சத்தாரிடம் கொங்கு நாடு சென்றது.இக்காலங்களிலெல்லாம் வெவ்வேறு இராச்சியங்களுடன் கொங்கு நாடு இணைக்கப்பட்ட போதிலும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை இந்நாடு இழக்கவில்லை. இந்நாட்டின் அமைப்பு மாத்திரம் அன்றி இந்நாட்டுக் குடிகளின் பழக்க வழக்கங்களும் பண்டைக்காலம் தொட்டு ஒரே விதமாக இருந்து வந்தன, சமூக வழக்கங்களிலும் ஏனைய நாட்டார்களிடமிருந்து சிறிது வேறுபட்டேயிருக்கும். இவ்விதக் காரணங்களினால் கொங்கு நாட்டைத் தனிநாடு என்று நிச்சயிக்ககூடும்” வராகமிகிரர் தன் நூலில் கொங்கு நாடு என்று குறிக்கின்றார்.
அசோகன் கி.மு. 278-232 கல்வெட்டிலும் தனி அரசாகக் குறிக்கப்பெறும் சதியபுத்திரர் கொங்கு நாட்டு மன்னன் அதியமானே என்பது ஜம்பைக் கல்வெட்டால் உறுதிப்படுகிறது.
' கொங்குநாடு ' என்னும் வரலாற்று நூலில் புலவர் குழந்தை பின்வறுமாறு குறிக்கின்றார்.
“… தொன்று தொட்டே கொங்கு நாடு சேர சோழ பாண்டியர்களாகி. முடியுடை மூவேந்தராட்சிக்கு உட்படாது தனியாட்சி நாடாகவே இருந்து வந்தது. வேளிர் எனும் சிறப்புப் பெயருடைய வேளாண்குடிச் செல்வராகிய கொங்கு நாட்டுத் தனி அரசர்கள் தமக்குள் பகையின்றி ஆண்டு வந்தனர். அவர்கள் முடியுடை மூவேந்தரிடத்தும் அன்போடு, பண்பும் அமைவும் உடையவராக இருந்து வந்தனர். முடியுடை மூவேந்தர்க்கும் மைத்துனரும் மாமனாரும் ஆகிய அவர்கள் பின்னர் எவ்வாறு இருந்திருப்பர். கேரளோற்பத்தி, கேரள மான்மியம் போன்ற நூல்களும், திருவாங்கூர்ச் சரித்திர ஆசிரியர் சங்குண்ணி மேனன் இவர்களும், டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்களும் கொங்கு தனியாட்சி நாடு என்பதைத் தக்க எடுத்துக் காட்டுகள் காட்டி நிறுவியுள்ளனர்”.
தொல்பொருட் சிறப்பும், கல்வெட்டுப் பரப்பும், சிற்பச்செல்வமும், வரலாற்றுப் பெருமையும் உடையது நமது கொங்குநாடு.
கொங்கு 24 நாடுகள்
கொங்கு நாட்டில் குடியேறிய வேளாளர்கள் நிர்வாக வசதிக்காகத் தாம் வாழும் நாட்டில் 24 நிர்வாகப் பிரிவுகளை ஏற்படுத்தினர். அவ்வாறு ஏற்படுத்திய ஒவ்வொரு நாடுகட்கும் ஒரு அவை இருந்தது. அதில் எல்லா ஊர்களுக்கும் அங்கம் அளிக்கப்பட்டது. அவர்கள் எல்லோரும் ஒன்றாகக் கூடி நாட்டுக் காரியங்களைச் செய்தனர்.
கோயில்கட்குக் கொடைகள் அளித்தனர். ஆலயத் திருப்பணியை மேற்கொண்டனர். குற்றவாளிகளை விசாரித்துத் தண்டித்தனர். நாட்டுக்கு வேண்டிய எல்லாப் பணிகளையும் செய்தனர். இந்நாடுகள் தல சுய ஆட்சியை மேற்கொண்டது. இது தமிழ்நாட்டின் வேறு எப்பகுதியில் இல்லாத ஒன்றாகும்.
கீழ்க்கண்டவாறு 24 நாடுகளாகும்.
1. பூந்துறை நாடு 2. தென்கரை 3. காங்கேய நாடு 4. பொங்கலூர் நாடு 5. ஆறை நாடு 6. வாரக்க நாடு 7. திருவாவினன் நாடு 8. மண நாடு | 9. தலைய நாடு 10. தட்டய நாடு 11. பூவாணிய நாடு 12. அரைய நாடு 13. ஒடுவங்க நாடு 14. வடகரை நாடு 15. கிழங்கு நாடு 16. நல்லுருக்கா நாடு | 17. வாழவந்தி நாடு 18. அண்ட நாடு 19. வெங்கால நாடு 20. காவடிக்கா நாடு 21. ஆனைமலை நாடு 22. இராசிபுர நாடு 23. காஞ்சிக்கோயில் நாடு 24. குறும்பு நாடு |
இவைகளைத் தொகுத்துப் பாடலாகவும் பாடினர்
சொல்ல அரி தானபூந்தது துறைசைதென் கரைநாடு
தோன்றுகாங் கேயநாடு
தோலாத பொன்கலூர் நாடு திகழ் ஆறையளி
தோய்ந்தவர் ரக்கநாடு
வல்லமை செறிந்ததிரு ஆவிநன் குடிநாடு
மணநாடு தலையநாடு
வரதட்டை பூவாணி அரையநாடு ஒடுவங்கம்
வடகரை கிழங்கு நாடு
நல்லுருக் காநாடு வாழவந் தியும் அண்ட
நாடு வெங் காலநாடு
நாவலர்கள் சொல்கா வடிக்காநாடு ஆனைமலை
இல்லறம் வளர்ந்துதவி மல்குகாஞ் சிக்கோயில்
இயல்செறி குறும்நாடு
இனியபுகழ் சேர்கொங்கு மண்டலந் தனிலான
இருபத்து நான்குநாடே
பிற்காலத்தில் நாடுகள் 24-ஐக் காட்டிலும் அதிகம் ஆயிற்று, வெங்கால நாட்டின் இணை நாடாக இடைப்பிச்ச நாட்டுடன் சேர்த்துக் கொள்ளப்பெற்றது.
கொங்கு நாடுகள் என்பது பொதுவான வழக்கு இதனை ‘நாலாறுநாடு’ என்ற இயக்கியத் தொடர் காட்டும். ‘மூவெட்டுநாடு’ எனக் கூறுவதும் உண்டு.
மக்கள் பெருக்கமும், குடியேற்றமும் பிற்காலத்தில் ஏற்பட்டபோது கொங்கு 24 நாடுகள் 42 நாடுகள் எனக் கூறபட்டன அவை:
தாராபுரம் சூழ்ந்தநாடு - 24
கோட்டை சூழ்நாடு - 6
குன்றத்தூர்க் கோட்டம்- 12
நாடுகளாகப் பிரித்து கூறப்படும். கோட்டை என்பது தணாயக்கன்கோட்டை, குன்றத்தூர் என்பது சங்ககிரியாகும். அண்மையில் கிடைத்த ஒரு செப்பேட்டு ஆவணம் கொங்கு 72 நாடுகள் எனக் கூறுகிறது. 24 நாடுகளை 24 கோட்டம் என அழைக்கும் வழக்கமும் உண்டு.
1 comment:
goood very good
Post a Comment