Mail Me

antos songs

Wednesday, August 24, 2011

கை எட்டும் தூரத்தில் ஆஸ்கார் - கேப்டனின் புதிய படம்

            சட்டை பேண்ட் என எல்லாம் கிழிந்து விஜயகாந்த் ஆபிஸில் இருந்து வெளியே ஓடுகிறார் ஒரு இளைஞர்.

அப்படி ஒருத்தன் வெளிய ஓடியும் தைரியமா இன்னொருத்தன் உள்ளே போனான்.

கேப்டன் "வாங்க உட்காருங்க" அந்த இளைஞரும் உட்காருகிறார்.

"நீங்க என்ன மாதிரி கதை சொல்ல போறீங்க?"

"சார் இது ஒரு கிராமத்து காதல் , மற்றும் உணர்வுபூர்வமான கதை சார்"

"ம்ம் சொல்லுங்க"

"சின்ன வயசியிருந்து நீங்க கோவில் தான் வளருறீங்க. கோவில் வேலைகளை எல்லாம் பறந்து பறந்து செய்றீங்க. கோவில விட்டா உங்களுக்கு வேற உலகமே இல்ல.உங்க பேரு "கோவில் கிளி"

"என்னது கிளியா" கோபம் கலந்த ஆச்சர்யத்துடன் கேப்டன்

"ஆமா சார். அப்படி பட்ட உங்க வாழ்க்கையில ஒரு பொண்ணு உள்ள வர்ரா அவ பேரு "வெட்டு கிளி"

"ம்ம்ம்ம் அப்புறம்..." பேப்பர் வெயிட்டை கையில் எடுக்குறார் கேப்டன்.

"ஒரு கட்டத்தில வில்லன் வெட்டுகிளியை கெடுக்க வரும் போது வெட்டுகிளி அருவாமனையால ஒரே வெட்டா வெட்டிடுறா. அப்ப நீங்க வர்ரீங்க. உங்ககிட்ட வில்லன் பொணத்த பார்த்துக்க சொல்லிட்டு போலீஸ்கிட்ட போறேன்னு போறா வெட்டுகிளி. ஆனா போனவ போனவ தான். திரும்பி வரவே இல்ல. இரண்டு நாள் கழிச்சு பொணத்தோட நாத்தம் தாங்க முடியாம போலிஸ் வந்து உங்கபிடிச்சுபோயிடுது. சார் இந்த படத்தோட தலைப்பை கேளுங்களேன்"

கேப்டன் ஒன்றும் சொல்லாமல் நெற்றியில் கை வைத்து உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.

"சார் நீங்களாவது கேளுங்களேன்" கேப்டன் மச்சானிடம்....
"சார் நீங்க?" ஆபிஸ் பாயிடம்....

கேப்டன் பொறுமையிழந்து "டேய் சொல்லித்தொலடா..."

"எழவு காத்த கிளி" என்று முடிக்கும் போது...

கேப்டன் அவன் மூக்கில் ஒரு குத்து விட, அவன் இரத்தத்துடன் "சார் இந்த கதை பிடிக்கலன்னா "யானை பசிக்கு சோள பொறி"ன்னு இன்னொரு கதை இருக்கு அதுவேணா கேட்குறீங்களா?" என்ற போது..

வாயில் ஒரு குத்து...வாயில் இரத்தத்துடன் "சார் விடுங்க சார் நீங்க இல்லைன்னா வேற யாருமில்லையா என்ன? நான் சரத் சார்கிட்ட போறேன் "ஓட்டுல சோத்த போட்டா ஆயிரம் காக்கா" என்று முடிக்கும் முன் பேப்பர் வெயிட்டை கேப்டன் தூக்கி அடிக்க....அவனும் வெளியே ஓடி போகிறான்.

நெக்ஸ்ட்ட்ட்ட்ட்ட் என்று குரல் கொடுக்க அடுத்தது ஒருத்தர் வரார்.

"நீங்க??" கேப்டன்

"சார் நான் பேரரசு சாரோட அஸிஸ்டெண்ட் சார்"

"அட பரவாயில்லையே சொல்லுங்க என்ன கதை கொண்டு வந்திருக்கீங்க?"

"சார் சொல்றத அப்படியே இமேஜின் பண்ணி பார்த்துங்க சார்......

"பாருங்க சார் முதல்ல சார் சின்ன கவுண்டர் மாதிரி ஒரு ஓபனிங் சார்...."கண்ணு பட போகுதய்யா"ன்னு எல்லாரும் பாடி ஆரத்தி எடுக்குறாங்க சார்..


ஆரத்தி


அங்கிருந்து அப்படியே கட் பண்ணா சார் நீங்க விமானத்தில போறீங்க சார்

விமானம்

அங்க சார் ஹாலிவுட் ரேஞ்சுக்கு ஒரு பைட்டு சார். ஆனா வில்லன் Hacksaw ப்ளேடால ப்ளைன்ன அறுத்துடுறான் சார்.. ஆனா சார் நீங்க சார் பைலட் இல்லாம சார் விமானத்தையே ஓட்டுறீங்க சார்.


விமானம்1

நீங்க சார் செத்துட்டதா நினைக்கிறாங்க சார் வில்லன் க்ரூப். ஆனா சார் நீங்க பாராசூட்ல ஆக்ரோஷமா தப்பிச்சு வர்ரீங்க சார்..

பாராசூட்
நீங்க வர்ர ஆக்ரோஷத்தப் பார்த்துட்டு வில்லன் க்ரூப் மட்டும் இல்ல சார் தியேட்டரே பயப்படுது சார். ஆனா சார் விதி வலியது சார். அந்த பாராசூட் நேரா நடு கடல்ல சார் விழுந்திடுது சார். 

அதுல பாருங்க சார் உங்களுக்கு ஒரு லக் சார்... பக்கத்தில டைட்டானிக் கப்பல் சார். நடுகடல்ல நாயர்கடையில சார்.... பேசஞ்சருக்கு "டீ" வாங்கி கொடுக்க நிக்குது சார்.
 அதுல ஏறி சார் நீங்க தப்பிச்சிறீங்க சார். அங்க சார் உங்க ஹிரோயின் இருக்காங்க சார். அவுங்களோட அப்படியே ரோமான்ஸ் சார்...


அப்படியே கப்பல பொள்ளாச்சிக்கு விடுறோம் சார். ரோஸோட "தந்தன தந்தன தை மாசம்..."ன்னு ஒரு டூயட் சார். ரொம்ப டீசெண்டான பாட்டு சார்.
ஆனா பாருங்க சார் கப்பல் ஒரு பெரிய பனிகட்டியில இடிக்குது சார். எல்லோரும் தண்ணியில விழுந்திறாங்க சார். நீங்க சார் எல்லாரையும் காப்பாத்திறீங்க சார். ஆனா பாருங்க சார். ஒரு பெரிய பார்க்கவே பயமுறுத்துற இராட்சத திமிங்கலம் உங்க கிட்ட வருது சார்.

சத்தியமா இது திமிங்கலம் தான்
பக்கத்தில சுவரு வேற இல்ல சார். ஆனா நீங்க விடல சார். தண்ணில போட்றீங்க சார் ஒரு பெரிய பைட்டு.........விடுறீங்க சார் சைடுல ஒரு குத்து. அதுக்கு அப்படியே பொறி கலங்கி போகுது சார்.... அது கண்ணுக்கு அப்படியே மூணு மூணா தெரியிறீங்க சார்...அதுவும் போலீஸ் ட்ரெஸ்ல சார்.

அவ்வ்வ்
அப்படியே அத மன்னிச்சு விடுறீங்க சார். கரைக்கு போய் எல்லாரும் ட்ரெயினை புடிக்கிறீங்க சார்.

டிரெயின்1

அங்க ஃபுட்போட்ல வர்ர பசங்ககிட்ட சார் "இந்த மாதிரி தொங்கிட்டு வந்தா டிரைவருக்கு சைடி மிரர் மறைக்கும்"ன்னு அட்வைஸ் பண்றீங்க சார்.உடனே அவுங்க திருந்தி உங்களுக்கு உதவியா வராங்க சார்.

ஒரு வயசான அம்மா இரயில்ல சார் கஷ்டப்பட்டு சுண்டல் வித்துட்டு வராங்க சார்.
 அத பார்த்துட்டு உங்களுக்கு அப்படியே மனசு இளகி சார் ஐஞ்சு ரூவாய்க்கு சுண்டல் வாங்கி ஒண்டியா திங்கிறீங்க சார்.

அந்த வயசான அம்மா சார் உங்கள கட்டி பிடிச்சு சார் "எம்.ஜி.ஆருக்கு அப்புறம் நீ தான்ய்யா"ன்றாங்க சார், அங்க வைக்குறோம் சார் ஒரு பாட்டு.
இரெயிலே ஆடுது சார் உங்க பாட்டுக்கு.

ஆனா சார் பாட்டு முடிஞ்சுதுக்கப்பறம் தான் சார் தெரியுது வில்லன் க்ரூப் ஒரு சைடு தண்ட வாளத்தை உடைச்சுடாங்கன்னு.
 

இரயில் மேல ஏறி தாவுறீங்க சார் ஒரு தாவு...போறீங்க சார் அப்படியே டிரைவர் சீட்டுக்கு.... போய் தூக்குறீங்க சார் உங்க ஒரு கால.. நிக்கிறீங்க சார் ஒரு சைடு முட்டு கொடுத்து.
...உங்க வெயிட்டுக்கு சார் இரயிலே ஒரு சைடு சாயுது சார்.

டிரெயின்2

துண்டான ஒரு சைடு தண்டவாளத்தை இரயில் தாண்டுன உடனே வைக்கிறீங்க சார் இன்னொரு கால கீழ....


டிரெயின் 4
டிரெயின் முன்ன மாதிரி நேரா ஓடிடுது சார். அங்க வைக்குறோம் சார்ர்ர்ர்......

"போதும் தம்பி போதும்...நீங்க இது வரைக்கும் சொன்ன கதையிலேயே எனக்கு பிடிச்சு போச்சு இனிமே நேரா சூட்டிங் சார்...." கேப்டன் அந்தர்பல்டி அடிக்கிறார்.

"இல்ல சார் இப்ப இண்டர்வெல் வரைக்கும் தான் சார் வந்திருக்கோம் இன்னும் பாதி கதை இருக்கு சார்" என்றவுடன்

கேப்டன் "என்னது இன்னும் பாதி கதை இருக்காஆஆஆஆஅ" என்றபடி கேப்டன் மூர்ச்சையாகிறார்.....
     

எனக்கே எனக்கா ஒரு பொண்ணு

                                                            தா னா தா னா தானன னா
தா னா தா னா தானன னா

னக்கே எனக்கா ஒரு பொண்ணு
கவர்ந்தே இழுக்கும் அவ கண்ணு..

டுப்பாய் இருக்கும் சடை ரெண்டு -அத
பார்த்தா பறந்திடும் என் மன வண்டு...

டிப் போச்சு மூன்றாண்டு - இனிதே
வாழ்வோம் சில நூற்றாண்டு

வேதம் சொன்னது மறை நான்கு - அன்றே
வாசுகி கொண்டாள் உன் பாங்கு

ஞ்ச பூதங்கள் அது அஞ்சு - உன்
மெல்லிய மனதோ இலவம் பஞ்சு

ரம் பம் பம் பம் பபபம்பம்
ரம் பம் பம் பம் பபபம்பம்

டிக் கடந்திடும் ஒரு ஆறு - எனக்கினி
உனையன்றி வேறாரு?

புடிச்ச நம்பர் அது ஏழு - எப்பவும்நீ
சாஞ்சுக்க இருக்கும் என் தோளு

புரட்டாசி மாதம் ஒரு எட்டு - 
                                                           என் மாமா பெற்ற சின்ன சிட்டு

ன்பது மாதம் பொறுத்திருந்து- உன்
அன்னையும் பெற்றாள் செல்ல கரும்பு

த்து பொருத்தமும் பார்க்கவில்லை - ஆனால்
அன்புக்கு இங்கே குறைவில்லை..

லா லா லா லா லாலல லா
லா லா லா லா லாலல லா

பார்த்தே கடந்தேன் பல பேரு - உனை போல
அழகி இங்க யாரு..

நீ செய்த குளோப் ஜாமூன் "வெடிகுண்டு"- உன்
சமையலால் ஆயிட்டேனே "Very" குண்டு

ன்பில் சிறந்தவள் என் தாயே - அவள்
மறு உருவாய் நீயும் வந்தாயே..

நிறைந்தே இருக்கும் சந்தோசம் - என்றும்
உன் மேல் குறையாது என் நேசம்!

தா னா தா னா தானன னா
                                                            தா னா தா னா தானன னா                                        
       

மெல்லத் தமிழ் இனி வாழும்

       

மெல்லத் தமிழ் இனி வாழும் ===============================
முதலில் என்னை ஆச்சரியப்படுத்தும் ஒரு விஷயம் என்னவென்றால் மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஒரு மொழி தன் மீது திணிக்கப்பட்ட சமூக, அரசியல் மற்றும் இயற்கை சார்ந்த அத்தனை மாற்றங்களுக்கும் ஈடுகொடுத்து இன்னும் உயிர்ப்போடு இருப்பது தான். ஏனென்றால் உலக மொழிகளில் பல காலவெள்ளத்தில் கரைந்து போய் விட்டதாகக் கேட்டிருக்கிறோம் ...தொன்மையான மொழிகள் பல சமுதாய மாற்றங்களினால் சிதைந்து போய் விட்டதைப் பார்த்திருக்கிறோம்.. தமிழுக்கு இணையான தொன்மையுடையதாய்க் கருதப்படும் சமஸ்கிருதம் கூட இன்று பெரும்பாலும் எழுத்தளவில் மட்டுமே உயிர் வாழ்கிறது.
ஆங்கிலம் போன்ற மொழிகளைப் போல தொடர்ந்து புதுப்பிக்கப் படாமல் (continuously updated ) ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ் உயிர்ப்புடன் இருந்து வருகிறது என்றால் அது தன் இளமைப் பருவத்திலேயே எவ்வளவு செம்மைப்படுத்தப்பட்ட மொழியாக இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கும் போது வியப்பு மேலிடுகிறது.
இன்றைய ஆதிக்க மொழிகள் பல விதை வடிவில் தூங்கிக் கொண்டிருந்த காலத்திலேயே தமிழ் விருட்சமாக வளர்ந்து நின்று "எழுத்து எனப்படுவ அகரம் முதல்" என்று ஆரம்பித்து செம்மையான ஒரு இலக்கண நூலை வடிக்கும் அளவு உயர்ந்திருந்தது என்பது தமிழர்கள் பெருமைப்படவேண்டிய ஒரு விஷயம்.
அரிதான ஒரு பொருள் நம் அருகில் இருந்தால் அதன் மதிப்பு நமக்குத் தெரியாது என்பார்கள்.நம் தாய்மொழியைப் பொறுத்தவரை அது உண்மையென்றே தோன்றுகிறது. இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஓர் உயர்ந்த மொழியைப் பேசுகிறோம் என்ற கர்வம் கலந்த பெருமை தமிழ்நாட்டில் எத்தனை பேரிடம் இருக்கிறது என்பதை விரல் விட்டு எண்ணிவிடலாம். தமிழ் நாட்டிலேயே திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வையுங்கள் என்று கேட்டுக்கொள்ள வேண்டியுள்ளது.நாடாளுமன்றங்களில் தமிழில் பேச மந்திரிகள் தர்மசங்கடமாக உணர வேண்டியுள்ளது
"மெல்லத் தமிழினி வாழும்"- இந்த வாக்கியத்தை இப்போது கொஞ்சம் அலசலாம்..இப்போது தமிழ் எங்கெல்லாம் 'வாழ்ந்து' கொண்டிருக்கிறது என்று முதலில் நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டியுள்ளது.பாடப் புத்தகங்களில்தமிழ் பன்னிரண்டாம் வகுப்பு வரை வாழ்ந்து விட்டு பின்னர் மறைந்து விடுகிறது. மொழிப் பாடமாகக் கூட தமிழை மாணவர்கள் தேர்ந்தெடுப்பதில்லை .அப்படியே போனால் போகட்டும் தமிழையும் படிப்போம் என்று தேர்ந்தெடுத்தாலும் மதிப்பெண்களுக்காக மட்டும் "தேரா மன்னா செப்புவதுடையேன்" என்று மனப்பாடம் செய்து விட்டு, தேர்வு முடிந்த மறுநாளே மாணவர்கள் கண்ணகியை மறந்து விடுகிறார்கள். "வாயிற் கடைமணி நடுநா நடுங்க" என்று வாசிக்கும் போது எத்தனை பேருக்கு பரவசத்தில் மனதுக்குள் மணி ஒலிக்கும் என்பது தெரியவில்லை.
அறிவியல் தமிழின் நிலைமை இன்னும் பரிதாபம். "Mass Density Variation " என்பதை 'பிண்டத் திணிவு ஏற்ற இறக்கம்" என்றெல்லாம் சொல்ல வேண்டி வருமோ என்று பயந்தே மாணவர்கள் பலர் தமிழ் வழிக் கல்வியைத் தேர்ந்தெடுப்பதில்லை போலும்..

Tuesday, August 9, 2011

தாயே......




கணினித் துறையில் வேலைபார்க்கும் தாயே,
என்ன காப்பகத்தில் விட்ட நீயே,
நகரத்துல வளந்த தாயே,
என்ன நரகத்துல விட்ட நீயே....

நம்ம வீட்டுக் குருவிக்கும்,
வளக்கும் நாயிக்கும், 
என் அழுகை தான் புரியுதே,
உன் அன்பின் மடியில 
ஆசையா தூங்க, 
இந்த பிஞ்சு மனசு தவிப்பது,
உனக்கு புரியுதா?..

உன் அன்புக்கும், உன் தீண்டலுக்கும்,
உன் முத்தத்திற்கும், 
உன் அன்பு மொத்தத்திற்கும்,
எனக்கு வார இறுதி நாள் மட்டும் உண்டு...

கணினித் துறையில் வேலைபார்க்கும் தாயே,
என்ன காப்பகத்தில் விட்ட நீயே,
நகரத்துல வளந்த தாயே,
என்ன நரகத்துல விட்ட நீயே..

ஏசி காத்துல வேலை செய்வா,
ஏழு லோகம் தாண்டியும் பேசிடுவா,
அன்பு மகன் என் நினைவு வந்தா,
அலைபேசியில் என் குரல் கேட்ப்பா,
பாவமப்பா...

கணினி பாத்தே அவள் காலம் தொலைப்பா,
என் காலம் வலமாக, அவள் இளமை தொலைப்பா,
நாளைக்கு தருகின்ற தாய்ப் பாலையும்,
புட்டிப் பாட்டிலுல சிறைபிடிப்பா,
தியாகமப்பா....

இரவு வரும்போது போகுறா,
பொழுது விடியும் போது தூங்குறா,
அவ உடம்ப இரும்பாக்கி உழைக்கிறா,
ஆசையாய் அவ மடிசாஞ்சா, 
அலுப்பா இருக்கு கண்ணான்னு அனுப்புறா,

கணினித் துறையில் வேலைபார்க்கும் தாயே,
என்ன காப்பகத்தில் விட்ட நீயே,
நகரத்துல வளந்த தாயே,
என்ன நரகத்துல விட்ட நீயே..

அம்மா என் அம்மா 
என் அருகில் இல்லை,
ஆனாலும் அவ பாசமெனக்கு
புரியாமயில்லை,
அவ அன்பைத்தவிர எனக்கு,
எந்த குறையுமில்லை...

அம்மா காசு இல்லா வீட்டில் சிரிப்பு இருக்கு, 
படிக்காத அம்மா வீட்டில் பாசம் இருக்கு,
என் அம்மா நெஞ்சிலும் அன்பு இருக்கு,
அந்த அன்ப காட்ட அவளுக்கு நேரமிருக்கா?.....

அம்மா உன் அன்பில் என்ன வஞ்சம்மா,
அட்டவணை போட்டு
நீ கொடுக்கும் அன்புக்கு,
என் மனசு ஏங்குதம்மா..
நீ சமைக்கும் சமையல,
ஊட்டி விடச் சொல்லி,
இந்த பாவி மனசு தவிக்குதம்மா..

காசு பணம் எல்லாம் இருக்குது,
அது என் பாசத்த உங்கிட்ட குறைக்குது,
பணம் கொடுத்து வாங்குன,
வாடகை தாய்கிட்ட (ஆயா )

என் அன்பு முழுவதும் போகுது...
உன் பூ முகம் எனக்கு மறக்குது...

நாலு ஒன்னொன்னும் போகுது,
அது தூரமா உன்ன கட்டுது.
நான் மொத மொத உச்சரிக்கும்
அம்மா என்ற சொல்ல, 
நீ உச்சி முகர்ந்து கேட்கனும்னு தோணுது,
அந்த அம்மா என்ற சொல்லும்,
ஆயாவுக்கு சொந்தமாய் போகுது...

கணினித் துறையில் வேலைபார்க்கும் தாயே,
என்ன காப்பகத்தில் விட்ட நீயே,
நகரத்துல வளந்த தாயே,
என்ன நரகத்துல விட்ட நீயே..


ஓசைகள் அற்ற ஓர் இரவில்....


ஓசைகள் அற்ற ஓர் இரவில்....


மௌனம் கலைத்து 
விட்டிருந்த 
அந்த வீட்டில்,
நடை பிணமாய் யார் யாரோ
வருகிறார்கள்,

ரத் தழுவி 
அடக்க நினைக்கும் 
சோகத்தையெல்லாம் 
கட்டவிழ்த்து விடுகிறார்கள்...

ழாதவர்கள் 
அன்பற்றவர்களாய் 
பெயர் சூட்டப்படுகிறார்கள்...  

மாதனம் செய்வதாய்,
சட்டை  கிழிக்கிறது,
சொந்தம்...

* சம்மந்த சாப்பாடென்று,
சந்தி சிரிக்க வைக்கிறது 
பிறிதொரு  கூட்டம்..

சில சடங்குகளுக்குப் 
பின் பிடி சாம்பலாய்
போகிறது 
இ(ரு)றந்தவர்  கோலம்...

றக்கம்மேதும் இன்றி,
வந்திட்ட மரணத்தின்  
வலியில்
சிக்கித் தவிக்கிறது,
இ(ரு)றந்தவர் குடும்பம்...

* கையோடு கை பொருத்தி
ஆறுதல் சொல்லிவிட்டு 
சலனமே இல்லாமல்,
வந்தவர் களைகிறார்கள்...

பின் ஓசைகள் அற்ற ஓர் 
இரவில்,
விழி வாசல் வந்து நிற்கிறது 
இ(ரு)றந்தவர் நினைவாய் 
கண்ணீர்த்துளிகள்..