ஓசைகள் அற்ற ஓர் இரவில்....
* மௌனம் கலைத்து
விட்டிருந்த
அந்த வீட்டில்,
நடை பிணமாய் யார் யாரோ
வருகிறார்கள்,
* ஆரத் தழுவி
அடக்க நினைக்கும்
சோகத்தையெல்லாம்
கட்டவிழ்த்து விடுகிறார்கள்...
* அழாதவர்கள்
அன்பற்றவர்களாய்
பெயர் சூட்டப்படுகிறார்கள்...
* சமாதனம் செய்வதாய்,
சட்டை கிழிக்கிறது,
சொந்தம்...
விட்டிருந்த
அந்த வீட்டில்,
நடை பிணமாய் யார் யாரோ
வருகிறார்கள்,
* ஆரத் தழுவி
அடக்க நினைக்கும்
சோகத்தையெல்லாம்
கட்டவிழ்த்து விடுகிறார்கள்...
* அழாதவர்கள்
அன்பற்றவர்களாய்
பெயர் சூட்டப்படுகிறார்கள்...
* சமாதனம் செய்வதாய்,
சட்டை கிழிக்கிறது,
சொந்தம்...
* சம்மந்த சாப்பாடென்று,
சந்தி சிரிக்க வைக்கிறது
பிறிதொரு கூட்டம்..
* சில சடங்குகளுக்குப்
பின் பிடி சாம்பலாய்
போகிறது
இ(ரு)றந்தவர் கோலம்...
* இறக்கம்மேதும் இன்றி,
வந்திட்ட மரணத்தின்
வலியில்
சிக்கித் தவிக்கிறது,
இ(ரு)றந்தவர் குடும்பம்...
* கையோடு கை பொருத்தி
ஆறுதல் சொல்லிவிட்டு
சலனமே இல்லாமல்,
வந்தவர் களைகிறார்கள்...
* பின் ஓசைகள் அற்ற ஓர்
இரவில்,
விழி வாசல் வந்து நிற்கிறது
இ(ரு)றந்தவர் நினைவாய்
கண்ணீர்த்துளிகள்..
No comments:
Post a Comment