முகவரி தொலைத்த முகங்கள்..
* வானம் போர்த்திய
பூமிக்குள்..
பலகோடி
சாயம் பூசிய போலி
முகங்கள்....
* முகவரி தந்த தாயிடம் கடிந்து கொண்டு ,
முகவரி இல்லா இணைய
நட்பிடம் சிரித்து சிரித்து
பேசும் சில முகங்கள்..
* தங்கையின் வேண்டுகோளை
நிராகரித்து, எதிர்வீட்டு நங்கைக்காய்
காத்துகிடக்கும் சில முகங்கள்..
* நலம் விசாரிப்பதாய் தொடங்கி
நண்பனின் சட்டைப்பையில்
ஒளிந்து கிடக்கும் சில முகங்கள்..
* உள்ளொன்று வைத்து,
புறம்தனில் இனிக்க இனிக்க
பேசி கழுத்தறுக்கும்
சில முகங்கள்...
* பிறர் உணர்வுகளை புரியாமல்,
உள்ளம் கொள்ளும் சில முகங்கள்
* காதலை வகைப்படுத்தி,
நாகரிகப்பெயர்சொல்லி
இளமையை தொலைக்கும்
சிலமுகங்கள்...
* விடியலில் கட்டிய மனைவியிடம்
கர்ஜனை செய்து விட்டு,
பெட்டிப் பாம்பைப் போல்
பிறர் பேச்சுக்குள் அடங்கிப் போகும்
சில முகங்கள்...
* சிரிக்க மறந்து, சிந்திக்க மறந்து
பிறர் உணர்வு மறந்து
தன் சுயம் எதுவென்று
அறியாத சில முகங்கள்
* சுற்றியுள்ள சமூகம்
வித விதமாய் நமைமாற்ற
நம் சுயம் மாறவும் முடியாமல்,
மீளவும் முடியாமல்,
போட்ட சாயத்தில் ஒன்றிப்போன
முகங்கள்
* வெளியில் ஒரு முகம்,
வீட்டில் ஒரு முகம்மென,
மாறிமாறி,
தன் முகம்
எதுவென தானே அறியாமல்
தன் முகவரி தானே
தொலைத்த முகங்கள்...
* வானம் போர்த்திய
பூமிக்குள்..
பலகோடி
சாயம் பூசிய போலி
முகங்கள்....
No comments:
Post a Comment