நமது கணிணியில் சிஸ்டம் ரீ-ஸ்டோர் செய்வது எப்படி?
அதில் உள்ள Run the System Restore Wizard தேர்வு செய்யவும்.
விண்டோஸ் எக்ஸ் பி சிஸ்டத்தில் சிஸ்டம்
ரீ-ஸ்டோர் என ஒரு வசதி உள்ளது. நாம் சில
சமயங்களில் புதிய சாப்ட்வேர் இன்ஸ்டால்
செய்தாலும் - கம்யூட்டர் சிஸ்டத்தில் ஏதாவது
மாற்றங்கள் செய்தாலும் கம்யூட்டர் செயல்படாமல்
செல்லலாம். அந்த மாதிரியான நேரங்களில்
புதிதாக நிறுவிய சாப்ட்வேரை நீக்கிவிடலாம்.
அப்படியும் கம்யூட்டர் தகராறு செய்தால்
சர்வீஸ் இன்ஜினியரை கூப்பிடும் முன்
ஒரு முறை சிஸ்டம் ரீ-ஸ்டோர் செய்து
பார்க்கலாம். இதனால் கம்யூட்டர் சரியாகி
விட வாய்ப்பு உள்ளது.
இனி சிஸ்டத்தில் ரீ-ஸ்டோர் எப்படி
செய்வது என பார்க்கலாம்.
முதலில் Start -கிளிக் செய்து வரும்
காலத்தில் Help and Support தேர்வு செய்யவும்.
உங்களுக்கு Pick up Help Topic காலம் வரும். அதில்
Performance and maintenance தேர்வு செய்யவும்.
உங்களுக்கு கீழ்கண்ட வாறு இந்த காலம்
ஓப்பன் ஆகும்.
அதில் நீங்கள் இடப்புறம்
உள்ள Using system Restore to undo Changes
தேர்வு செய்யவும்.
அதை தேர்வு செய்தவுடன் உங்களுக்கு வலப்புறம்
கீழ்கண்டவாறு ஒரு காலம் ஓப்பன் ஆகும்.
படத்தில்உள்ள வாறு Welcome System Restore
காலம் தேர்வாகும்.
அதில் Restore my Computer to an Earlier Time
எதிரில் உள்ள ரேடியோபட்டனை தேர்வு
செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட வாறு
மாதக்காலண்டருடன் ஒரு காலம்
ஓப்பன் ஆகும். அதில் நீங்கள் விரும்பும்
தேதியை கடைசியாக மாறுதல் செய்த
தேதிக்கு முன் மாறுதல் செய்த தேதியை
காலம் ஓப்பன் ஆகும். அதில் நீங்கள் மாற்றம் செய்ய
விரும்புவதை எச்சரிக்கும் செய்திவரும்.(இதில் முக்கிய
மான எச்சரிக்கை என்னவென்றால் நீங்கள் சிஸ்டம்
ரீ-ஸ்டோர் செய்யும் போது சிடி டிரைவோ அல்லது
யுஎஸ்பி போர்டோ உபயோகப்படுத்தக்கூடாது.
ஏனென்றால் அதன் டிரைவர் செயல்இழக்கும் அபாயம்
உண்டு)
பிக்கும். இது முடிய சில நிமிடங்கள் ஆகலாம். அடுத்து
மீண்டும் உங்களை ஓகே கேட்கும் . ஓகே கொடுக்கவும்.
இதில் உங்களுடைய டாக்குமெண்ட் ஏதும் மாறாது.
இ-மெயில்கடிதங்கள் மாறாது. புதிதாக நிறுவிய
சாப்ட்வேர் நீங்கிவிடும். நீங்கள் சிஸ்டத்தில்
ஏற்படுத்திய மாற்றங்கள் மட்டும் நீங்கிவிடும்.
சிஸ்டம் ரீ-ஸ்டோர் செய்ய தயாரா?
No comments:
Post a Comment