வேர்ட் புரோகிராமில் தயாரிக்கப் பட்ட ஒரு பைலை, எச்.டி.எம்.எல். பைலாக மாற்றி இணையத்தில் பதித்துக் காட்டுவது போல, பிரசன்டேஷன் பைலையும் எச்.டி.எம். எல். பைலாக மாற்றி, இணையத்தில் இயங்கும்படி வைக்கலாம். உங்கள் பவர்பாய்ண்ட் ஸ்லைடுகளை இணையத்தில் பதித்துக்காட்ட கீழ்க்காணும்படி செயல்படவும்.
1. முதலில் எந்த பிரசன்டேஷன் பைலை இணையத்தில் பதிந்து காட்ட வேண்டுமோ அதனைத் திறக்கவும்.
2. அடுத்து பைல் மெனுவில் “Save as Web Page” என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். “Save As” என்ற தலைப்புடன் ஒரு சிறிய டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இவ்வாறு சேவ் செய்கையில் எந்த இடத்தில் சேவ் செய்திட வேண்டுமோ அந்த டிரைவ் மற்றும் போல்டரைத் தேர்ந்தெடுக் கவும். “File name” என்னும் பாக்ஸில் பைலுக்கான பெயரை டைப் செய்திடவும்.
3. இந்த “Save As” டயலாக் பாக்ஸில் “Publish” என்னும் பட்டனைக் கிளிக் செய்திடவும். இதில் பிரசன்டேஷன் முழுமையும் இணையத்தில் பப்ளிஷ் ஆக வேண்டுமா அல்லது குறிப்பிட்ட ஸ்லைடுகள் மட்டும் பப்ளிஷ் ஆக வேண்டுமா என்பதைத் தேர்ந்தெடுக்கலாம்.
4. அடுத்து எந்த பிரவுசர் மூலம் நீங்கள் சப்போர்ட் செய்கிறீர்கள் என்பதையும் காட்ட வேண்டும். இதனை “Browser support” என்ற பிரிவில் மேற்கொள்ள வேண்டும். அதே டயலாக் பாக்ஸில் “Web Options” என்ற பட்டனைக் கிளிக் செய்திடவும். இதில் இணைய அம்சங்களை வரையறை செய்திடலாம்.
இணையத்தில் ஸ்லைட் தோன்றும் விதத்தினை General என்பதிலும், Browsers என்பதில் சப்போர்ட் செய்திடும் பிரவுசரையும், Files என்பதில் பைல்களின் இடம் மற்றும் பெயர்களையும், Pictures என்பதில் படங்களுக்கான ஸ்கிரீன் அளவினையும், Encoding என்பதில் வெப் பேஜுக்கான என்கோடிங் திட்டத்தினையும் Fonts என்பதில் எழுத்து வகை மற்றும் அளவினை யும் வரையறை செய்திடலாம்.
பின் இந்த வெப் ஆப்ஷன்ஸ் அனைத்தையும் சேவ் செய்திட ஓகே கிளிக் செய்திடவும். பின்னர் Publish பட்டனை கிளிக் செய்தால் உங்கள் பிரசன்டேஷன் பைல் எச்.டி.எம்.எல். பார்மட்டில் சேவ் ஆகும். இதுதான் இணையத்திற்குத் தேவையான பார்மட். இனி உங்கள் வெப் சர்வருக்கு இதனை அப்லோட் செய்திடலாம்
No comments:
Post a Comment