கூகுளின் மறுபெயர் புதுமை...!
இணையத்தில் தேடும் வசதியை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்கின்றது கூகுள். ஒரு அலைபேசியில் தொடுதிரை, கேமரா,Scanner,wifi,கூகுள் மேப்,கூகுள் சர்ச்,இமேஜ் சர்ச். கீழே பாருங்கள் இதுதான் , அடுத்த இமேஜ் சர்ச்அதாவது படம் மூலம் தகவல்களை பெறுவது...படங்களை தேடுவது அல்ல.
இக்கருவியின் மூலம் நீங்கள் ஒரு கட்டிடத்தை பார்த்தால், அடுத்த கணம்அக்கட்டத்தின் தகவல்களை உங்களுக்கு காட்டும்.என்ன மலைப்பாக இருக்கின்றதா...
அதற்கும் மேலாக அக்கட்டத்தின் ஒரு மாடியை தொடுதிரையில் நீங்கள் தொட்டால் , அதன் விவரமும் கிடைக்கும் ...
Scanner அடிப்படையாக கொண்டு இயங்குகின்றது.நீங்கள் ஒரு பூவை இதன் மூலம் பார்த்தால் அதன் மொத்த தகவலும் உடனுக்குடன் உங்களுக்கு.இதை நீங்கள் மகிழ்வுந்து ,பூச்சி,பாலம் போன்றவற்றின் தகவல் அறியவும் பயன்படுத்தலாம்.
நீங்கள் காலையில் தினசரி வாசித்து கொண்டிருக்கிறீர்கள்...அப்போது ஒரு சொல்லின் அர்த்தம் தெரியவில்லையா?கவலையை விடுங்கள்.அச்சொல்லின் ஆதி அந்தம் வரையில்
உங்களுக்கு ஒரு நொடியில்.அப்படியும் உங்களுக்குதிருப்தி இல்லையா ?நீங்கள் விக்கிபீடியா முதற்கொண்டு இணையத்திலும் அச்சொல்லை பற்றி தகவல்களை அறியலாம்.
நீங்கள் இனி தினசரியிலும் தேடலாம்...!
உங்கள் தினசரி அல்லது புத்தகங்களை , மொழிபெயர்க்கலாம் உடனடியாக...!
இதை எங்கே வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்...!
ஒரு பழத்தை இதன் மூலம் பார்த்தால் ...!
எனக்கு இது மெயிலாக வந்தது...என்ன ? நினைத்து பார்க்கவே
வியப்பாகவும் ,மலைப்பாகவும் உள்ளதா.கூகுள் முதன்மை இடத்தில் ஏன் இருக்கின்றது என்பது புரிகின்றது .கூகுளின் மறுபெயர் புதுமை...!
No comments:
Post a Comment