Mail Me

antos songs

Friday, May 20, 2011

காத்திருத்தலின் அவஸ்தைகள்... கவிதை.

      வாழ்வின் பெரும்பகுதி
காத்திருத்தலிலேயே கழிகிறது... அறிவீர்களா?

காத்து கிடந்தேன் என்று -
ஒற்றை வரியில் சொல்வது சுலபம்...
ஆனால் அதன் தாக்கத்தை
பக்கபக்கமாக எழுதலாமே...

காத்திருந்து
பெற்றது - வெற்றியாகின்
காத்திருத்தலிலும்
இன்பம் இருக்கிறது...

காத்திருந்து
பெற்றது - துயரமாயின்
காத்திருந்ததும் வீணே...
பெற்றதும் வீணே...

காத்திருத்தலின் வலி -
காக்க வைத்தவனுக்கு
ஒரு போதும் தெரிவதே இல்லை...

வெற்றிக்கு காத்திருக்கையில் தோல்வி...
தோல்விக்கு காத்திருக்கையில் வெற்றி...
காத்திருப்புகள்
பல நேரங்களில் கண்ணாமூச்சி ஆடுகின்றன...

வாழ்க்கை முழுக்க
எத்தனை எத்தனை காத்திருப்புகள்...
வேலைக்கு, காதலுக்கு,
வாழ்க்கைக்கு,
திருமணத்துக்கு
என்று சொல்ல முடிந்த,
சொல்ல முடியாத காத்திருப்புகள்
நிறைய... நிறைய...

எல்லாம் முடிந்ததே,
இனி காத்திருக்க வேண்டியதில்லையே
என்று மகிழ்கிற வேளையில்...

புதிய காத்திருப்பொன்று வந்துவிட்டது...
வாழுவதற்காக காத்திருந்தது போய் -
சாவதற்காக காத்திருக்கும் அவலம்...

பிறகென்ன... மரணத்திற்கு பிறகும் -
மறுபிறப்பிற்கு காத்திருப்பேனோ...                                

No comments:

Post a Comment