உலகம் தோன்றிய நாளில் இருந்தே, பலம் பொருந்தியவர்கள்- பலவீனமானவர்களை வதைப்பது உள்ளது. திருப்பி தாக்கும் சக்தி இல்லாதவன், தன்னால் என்ன பண்ண முடியும் என்பதை உணர்ந்து, தன்னால் எதுவுமே பண்ண முடியாது என்பதையும் உணர்ந்து, அவலக் குரலில் சொன்ன வார்த்தைகள் தான்"கடவுள் பார்த்து கொள்வான்" என்பது. திருப்பி தாக்கும் சக்தி இல்லாதவனோடு, வன்முறையின் மீது நாட்டமில்லாதவனும், "கடவுள் பார்த்து கொள்வான்" என்று அமைதியாக
இருக்கிறான். திருப்பி தாக்கும் சக்தி இல்லாதவர்களில், ஒரு பிரிவினர்-
தருணம் பார்த்து, திருப்பி தாக்கவும் செய்கின்றனர். அதாவது பழிக்கு பழி.
சரி... கடவுள் பார்த்துக் கொள்வாரா... அடியாரின் குரலுக்கு, கடவுள் செவி
சாய்ப்பாரா... கடவுள் தண்டிப்பாரா... பார்த்து தண்டிக்க கூடிய கடவுள்,
ஏன் மனிதன் தவறிழைப்பதையே தவிர்க்கக் கூடாது. நிர்வாணம் அசிங்கம் என்கிற உணர்வை ஊட்டிய இறைவன், ஒருவனுக்கு ஒருத்தி என்கிற மனநிலையை உண்டு பண்ணிய கடவுள், மனிதனுக்கும், மிருகத்துக்குமான வித்தியாசத்தை அறிய தந்த ஆண்டவன்- உயிர் வதையை தடுத்தலை, மனிதனின் பிறவிக் குணத்தில் ஒன்றாக ஏன்
வைக்கவில்லை. இது நாத்திகத்தின் கேள்வி.
உலகில் சில கேள்விகளுக்கு மாத்திரம் விடைகளே இருப்பது இல்லை. சரி, கடவுளை நம்பும் மனம் தானே, கடவுள் பார்த்து கொள்வான் என்று இருக்கும். கடவுளை நம்பாத மனம் என்ன நினைக்கும். கடவுள் தண்டிப்பாரா... "காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக" என்பது மாதிரி, தவறிழைக்கின்றவன், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், ஏதோ
ஒன்றுக்காக வதைப் படும் போது அல்லது கஷ்டத்தில் சிக்கும் போது, மனம் என்ன சொல்லும், "பார்த்தியாப்பா தெய்வம் கேட்டுடுச்சு. மோசம் நாசம் பண்ணினவன் நல்லா இருந்ததா சரித்திரம் இல்ல. தப்பு பண்ணினவன தெய்வம் சும்மா விடாது". என்று சொல்கிறது.
ஏதோ ஒன்றை, ஏதோ ஒன்றுடன் மனசு முடிச்சு போடுகிறது. மனம்
ஒரு போதும் கடவுள் தந்த தண்டனையை, அதற்கு மேல் ஆராய்வதில்லை. தப்பு செய்தான்... கடவுள் பார்த்து கொண்டான் என்கிற அளவில் ஆன்மீக மனம் நின்று கொள்கிறது. ஆனால் நாத்திக மனம், "இத விட ரெம்ப தப்பு பண்ணினவன் எல்லாம் கல்லு மாதிரி நல்லா இருக்கிறானே . அவனை ஏன் தண்டிக்கல" என்று வியாக்கியானம் பேசினாலும் அதிலும் உண்மையில்லாமல் இல்லை. ஆனாலும் "கடவுள்
பார்த்துக் கொள்வான்" என்கிற மாதிரியான சில எண்ணத்தின் விளைவுகளே, தவறு நிறைய நடப்பதை தடுக்கிறது.
பசியால் தவிப்பவனுக்கு, உணவு தருபவன் கடவுள் ஆகிறான். அழுகிறவனுக்கு கண்ணீரை துடைப்பவன் கடவுளாகிறான். அதனால் தான்
சினிமா நடிகர்களை கடவுள்கள் ஆக்குகிறார்களோ.
படித்தவர் கடவுளை பார்ப்பதற்கும், பாமரர் கடவுளை பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. படித்தவருக்கு, அவர் கடவுள் என்கிற அளவே நேசம். நாளுக்கொரு முறையோ, வாரத்திற்கொரு முறையோ, மாதத்திற்கொரு முறையோ அல்லது வருஷத்திற்கொரு முறையோ என்று, வேலை நேரம் போக, போனால் போகிறது என்று- கடவுளை பார்த்து வணங்கி, தன் வேலையை பார்க்கப் போகிறார்....
ஆனால் பாமரர்களுக்கு, கடவுள் உயிரை விட உன்னதமானவர். உலகில் கடவுளை விட உயர்வாக, வேறு எதையும், அவரால் கருத முடியாது. வெற்றிக்கும் அவரே காரணமாகிறார். தோல்விக்கும் அவரே காரணமாகிறார். கஷ்டம் வந்தால், "கடவுளே தன்னை சோதிப்பதாக" நம்புகிறான். நல்லது நடந்தால், "கடவுள் தந்ததாகவே" கருதுகிறான். அதனால் தான், தன்னால் திருப்பி தர முடியாத அடியை, கடவுள்
கொடுப்பான் என்று நம்புகிறான். பகுத்தறிவோடு சிந்திக்கும்போது, அதெல்லாம் சாத்தியம் இல்லாத ஒன்று என்பது புரியும்.
காரணம்... தண்டிக்கப் போவது எந்த கடவுள். கடவுளுக்கும் இட ஒதுக்கீடு தரப்பட்டுள்ளது. உலகம் நாகரீகம் அடைய, அடைய- கடவுளர்களிடமும், அவர்களின் தோற்றங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டது. ஒரு வேளை, மனிதன் நாகரீக சாயல் இல்லாமல், காடுகளில் இன்றளவும் வாழ நேர்ந்து இருந்தால், அவனது கடவுள் வேறாக விதமாக இருந்திருக்கக் கூடும். காரணம், இராயிரம் ஆண்டுகளுக்கு ஒரு கடவுள் இங்கே உதயமாகிறார்.
எது எப்படியானாலும், தவறு செய்பவர்களை- கடவுள்களால் கவனிக்கப் படுவார்கள் என்பது பலவீனமானவர்களின் நம்பிக்கை. சில நேரம் இது நிஜமாகிவிடுகிறது.
எப்படி. கடவுள்களால் அல்ல. மனித தெய்வங்களால்... கடுமையான சட்டங்களே சில நேரம் கடவுள்கள் ஆகின்றன. நேர்மையாக வழங்கப்படும் தீர்ப்பே, சில நேரம் தண்டனையாக அமைகின்றன. ஆனால் பாருங்கள். மக்களின் தவறை தண்டிக்க, நீதியரசர்கள் இருக்கிறார்கள். மேலிடம் செய்யும் தவறுகளை எந்த கடவுள் தண்டிப்பார். காலங் காலமாய் பல்வேறு இனங்கள் மீது நடக்கும் கொடூரமான
இனப்படுகொலைக்கு, இது வரை யாருக்கு எந்த கடவுள்களால் தண்டனை
கொடுக்கப்பட்டுள்ளது.
கடவுள்களாக, இங்கே கோவில்களாக ஐ.நா மன்றம் வருகின்றது, சர்வதேச மனித உரிமை அமைப்பு வருகிறது. உலகிலே யாருமே
ஒழுங்காக தங்கள் வேலைகளை செய்யாதது போல் கடவுளும், தன் வேலையை ஒழுங்காக செய்யவில்லையோ. அழுகின்றவனின் கண்ணீரை துடைக்கவும், அடி வாங்குயவனின் சார்பாக, திருப்பி அடிக்கவும் வருவாரா...
உலக நாகரீகம் வளர்ந்து, வளர்ந்து- கடவுளே வியந்து போகும் அளவு விஞ்ஞானம் வளர்ந்த போதிலும், இன்னும் கடவுளை நினைத்து பயப்படும் மக்கள் இருப்பது, மிகப் பெரிய ஆச்சர்யத்துக்குரிய ஒன்று தான். அதை விட பெரிய ஆச்சர்யம்- மனிதர்களுக்குள் நீங்காத பகை உணர்வுகள்.
ஒரு பார்வையாளனாக நின்று, இந்த உலகை பார்க்கும் போது, மக்கள் நினைப்பது போல், கடவுள் தண்டிப்பாரா... கடவுள் எல்லாவற்றையும் பார்த்து கொள்வாரா... இம்மாதிரியான நம்பிக்கைகள் எதுவரை என்று என்னையே நான் கேட்கிறேன்.
விடை கிடைக்கிறது. ஏற்றத் தாழ்வுகள்- மொத்த உலகில் நீங்காத வரை, ஆண்டான், அடிமை பாகுபாடு மறையாத வரை - அடிபடவும், அழுது வாழவும் மக்கள் இருப்பார்கள். அதுவரை இந்த உலகில் கடவுளை மக்கள் எதிர் பார்த்து கொண்டு தான் இருப்பார்கள்.

No comments:
Post a Comment