Mail Me

antos songs

Friday, May 20, 2011

சுயபரிசோதனை

  
வாழ்க்கையில் தோல்வி அடைந்த பெரும்பாலோரை பார்த்தால் ஒரே ஒரு விஷயம்
மட்டும் சரியாக விளங்கும். அது.. எவனொருவனுக்கு சுயபரிசோதனை குறித்த
விழிப்புணர்வு இல்லையோ அவன் தோல்வியையே தழுவுவான். சரி. வெற்றி பெற்ற
எல்லோரும் சுயபரிசோதனை செய்பவர்கள் தானா. இல்லை தான். வெற்றி பெற்ற
எல்லோரும் சுயபரிசோதனை செய்தவர்கள் தானா என்று சொல்ல முடியாது. சிலருக்கு இயல்பாகவே
எல்லா ஆற்றலும் இருக்கும். அது இயல்பாக வெற்றியை கொடுத்து விடும். அழகாய்
இருப்பவருக்கு மேக்கப் தேவையில்லை தானே. தனி மனிதனுக்கு மட்டும் தான்
சுயபரிசோதனை தேவையா. இல்லை. தோற்று கொண்டு இருக்கும் ஒரு விளையாட்டு
குழுவுக்கு, விற்பனை சரிவை சந்தித்து கொண்டு ஒரு பத்திரிகை, ப்ளாப்
படத்தை தந்து கொண்டு இருக்கும் ஒரு பட நிறுவனம் என்று எல்லோருக்கும்
சுயபரிசோதனை அவசியம் தேவை. இந்தியா போன்ற ஒரு தேசத்திற்கு கூட
சுயபரிசோதனை அவசியப்படுகிறது. அப்படி தன்னை இந்தியா சுயபரிசோதனை
செய்யவில்லை எனில் ஏமாளி தேசமாக மாறக்கூடிய சூழல் உள்ளது. இலங்கை ராணுவம்
தன்னை மிகச் சரியாக, மிகைப் படுத்திக் கொள்ளாமல் சுயபரிசோதனை செய்து
பார்த்ததால் தான் இன்று மிகப் பெரிய ராணுவ வெற்றியை பெற்று நிம்மதி
பெருமூச்சு விடுகிறது. ஒரு வேளை புலிகள் தங்களை நல்லப்படி சுயபரிசோதனை
செய்து-தங்களால் எது முடியும், எது முடியாது என்பதை மிக ஆழமாக, மிக
நேர்மையாக கண்டுணர்ந்து இருந்தால் வெல்ல முடியாதவர்களாக இருந்து
இருப்பார்கள். மேலும் அமெரிக்காவிற்கும் சுயபரிசோதனை அவசியம் தேவை.
அழிவு, அழிவு, மிகப்பெரிய அழிவையும் பார்த்து கொண்டு, பொருளாதார ரீதியாக
அடிவாங்கி கொண்டு- இன்னும் தனது ஆதிக்க போக்கை கைவிடாமல் இருப்பது...
எதிர்கால அமெரிக்காவை பாதிக்கும். சரி... நான் இனி தனி மனித
சுயபரிசோதனைக்கு வருகிறேன் . சுயபரிசோதனையின் முதல் பாடமாக நான் கருதுவது-
நம்மால் எது முடியும், எது முடியாது என்பதை நேர்மையாக கண்டுணர்வது. நான்
ப்ளஸ்டூ வில் 55 சதவிதம் மதிப்பெண் பெற்று இருந்தேன். எனக்கு 3rd குருப்
கொடுத்தார்கள். என் அப்பா 1st குருப் கேட்டார். மறுத்து விட்டனர்."உங்க
பையன் வாங்கின மார்க்க்கு இந்த குருப் தான் தர முடியும்" என்றனர். என்
அப்பா சுமாரான ஸ்கூலில் ஒன்றில் பஸ்ட் குருப்பிலேயே சேர்த்து விட்டார்.
நான் அந்த 15 வயதிலேயே என்னை உணர்ந்து இருந்தேன். என் அறிவை பற்றி எனக்கு
தெரிந்து இருந்தமையால் "அப்பா வேணாம். என்னால் படிக்க முடியாது"என்றேன் ஆனால்
அப்பா கேட்கவில்லை. விளைவு. நான் ப்ளஸ் டூவையே தாண்டவில்லை. அதற்காக
வருத்தப்படவில்லை. பின்னாளில் வேறு வகையில் வந்த வெற்றிகளால்-
கல்வியற்றதால் வந்த வெற்றிடம் மறைந்து போனது. தெரிந்தோ, தெரியாமலோ
இயல்பாகவே சுயபரிசோதனை எனும் அம்சம் என் ரத்தத்தோடு கலந்துவிட்டது.
சுயபரிசோதனை என்பது எங்கேயெல்லாம் தேவைப்படுகிறது. அதற்கு வரையறை எல்லாம்
உண்டா. சுயபரிசோதனைக்கு வரையறை எல்லாம் கிடையாது. அது எல்லா நிலையிலும்,
எல்லா இடத்திலும் தேவைப்படுகிறது. உதாரணமாக திருமணத்திற்கு கூட
சுயபரிசோதனை தேவைப்படுகிறது. அதை நம்மவர்கள் வெகு அழகாக "தகுதி" என்று
சொல்வார்கள். ஒரு நிறம் குறைவான பையன், மிக மிக அழகான பெண்ணை தான்
திருமணம் செய்வேன் என்று அடம் பிடிப்பது கூட சுயபரிசோதனை செய்யாததன்
விளைவு தான். அதன் விளைவு என்னாகும். பெண் பார்த்து கொண்டே இருக்க
வேண்டியது தான். அழகான பெண் அமைந்தாலும் அமையலாம். அமையாமலும் போகலாம்.
மனநல மருத்துவர் கூட உங்களை சுயபரிசோதனை செய்கிறார். ஒன்றை செய்வதற்கு
மட்டும் சுயபரிசோதனை தேவையாய் இருப்பதில்லை. ஒன்றை செய்யாமல்
விடுவதற்கும் சுயபரிசோதனை தேவைப்படுகிறது. வெற்றி பெறுவதற்கு மட்டும்
சுயபரிசோதனை தேவையாய் இருப்பதில்லை. தோல்வியில் இருந்து தவிர்ப்பதற்கும்
சுயபரிசோதனை தேவையாய் உள்ளது. குருட்டாம் போக்கில் ஜெயிப்பது வெகு சிலரே.
முட்டி மோதி, கஷ்டப்பட்டு, ரணப்பட்டு வெற்றி பெறுபவரே அதிகம். நாம்
இரண்டாமவரை தான் உதாரணமாக எடுத்து கொள்ள வேண்டும். ஆனால் நம்மவர்களின்
துரதிருஷ்டம். முதலாமவரை உதாரணமாக எடுத்து கொண்டு குருட்டுத் தனமான
வெற்றிக்கு ஆசைப்படுகிறோம். இது கூட சுயபரிசோதனை செய்து பார்க்காததன்
விளைவே. புத்தகக் கண்காட்சிக்கு போனால் தன்னம்பிக்கையை வலியுறுத்தும்
நூல்களும், தோல்வியில் இருந்து தப்பிப்பது எப்படி போன்ற வகை நூல்களும்,
வெற்றி பெறுவதற்கான ஆலோசனை நூல்களும் நிரம்பி வழிகின்றன. புத்தகம்
படிப்பதால் மட்டும் ஒருவனுக்கு தன்னம்பிக்கை வந்து விடுமா.. இந்த நூலை
படிப்பதால் மட்டும் ஒருவன் வெற்றி பெற முடியுமா.. சில இடத்தில்
வகுப்பெடுக்கிறார்கள், இரண்டு மணி நேர கிளாஸ்.. 500 ரூபாய் கட்டணம்.
எதற்கு என்று கேட்கிறீர்களா. தன்னம்பிக்கைவளர கோச்சிங். வெற்றியாளானாக
வர கோச்சிங். மனிதனுக்கு இயல்பாக இருக்க வேண்டிய குணங்கள் எல்லாம்
வகுப்பெடுத்தால் தான் வரும் என்பதெல்லாம் கொடுமையான விஷயம் தான். எனக்கு
சுயபரிசோதனை பற்றி ஒன்றும் தெரியாது... அந்த அளவுக்கு எனக்கு விபரம்
தெரியாது என்று எவரேனும் (எனக்கு விபரம் தெரியாது என்று ஒருவர் உண்மையை
ஒத்து கொள்வதே சுயபரிசோதனையின் வெளிப்பாடு தான். எனக்கு எல்லாம் தெரியும்
என்று பாவனை செய்வதற்கு இது எவ்வளவோ மேல்) உங்களால் சுயபரிசோதனை செய்ய
முடியாது என்று கருதினால்- உங்கள் பலம், பலவீனம் தெரிந்த உங்கள் நலம்
விரும்பியிடம் (நண்பராக, மனைவியாக ஏன் உங்கள் பெற்றோராக கூட இருக்கலாம்.
ஆனால் உண்மையிலேயே உங்கள் நலம் விரும்பு பவராக இருக்க வேண்டும் ) உங்கள்
இடத்தில் அவர் இருந்து கொண்டு- தன்னை உங்களாக பாவித்து கொண்டு உங்களை
சுயபரிசோதனை செய்வார். பிறகு நீங்கள் எது செய்ய வேண்டும், எது செய்ய
கூடாது என்று அவர் சொல்வார். உங்களுக்கு அவர் உண்மையாக இருப்பின் நீங்கள்
வெற்றி பெறுவீர்கள். நண்பர்களால், மனைவியால் வெற்றி பெற்றது இப்படி தான்.
ஆடை இல்லாதவன் மட்டும் அரை மனிதன் அல்ல. தன்னை தானே சுயபரிசோதனை செய்து
கொள்ளாதவனும் அரை மனிதனே.                  

No comments:

Post a Comment