தவறு செய்பவர்களை பற்றி பேசும்போது, சிலர் சொல்வார்கள். "சந்தர்ப்பங்கள் வாயக்காத காரணத்தால் தான் எல்லோரும் தப்பு பண்ணாம்ம இருக்காங்க" என்று. அதாவது யோக்கியனாக இருப்பதற்கு காரணம் சூழ்நிலை தானே ஒழிய மனநிலை அல்ல என்பது போல்... இன்று இப்படி சொல்லிக் கொள்ளுவதும் ஒரு வாடிக்கையான விஷயமாகி விட்டது. "யாரு தான் தப்பு பண்ணல. எல்லோரும் தான் தப்பு பண்றாங்க. மாட்டாத வரைக்கும் எல்லோரும் நல்லவர்கள்"...
தவறுகளுக்கு நியாயம் கற்பிக்கும் வார்த்தைகள். சரி. "யாரு தான் தண்ணியடிக்கல"... "யாரு தான் லஞ்சம் வாங்கல"... "யாரு தான் _________ போகல"... அதாவது யாருமிங்கே யோக்கியர்கள் இல்லை என்கிற தொணியில் வரும் வாசகங்கள்... இது எந்தளவுக்கு உண்மை... எந்தளவுக்கு பொய்.
பல வருஷங்களுக்கு முன் நான் படித்த ஒரு கதையில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை வரும். காதலனும் காதலியும் தனித்திருக்கும் வாய்ப்பு கிட்டும். அப்போது காதலன் காதலியிடம் அத்து மீறத்துடிப்பான்- தவறான நோக்கத்தோடு வரும் அவனை உதறி விடுவாள். அப்போது அவன் சொல்வான். "தவறு செய்யக்கூடிய வாய்ப்பு கிடைக்காததால் தான்
எல்லோரும் யோக்கியர்களாக இருக்கிறார்கள்" என்று சொல்லி தொடர்ந்து தொந்தரவு செய்வான். அப்போது அவள் கோபத்தில் கேட்பாள், இப்படி "உங்க அம்மாவுக்கும் தப்பு பண்ண ஒரு சந்தர்ப்பமும் கிடைக்கலயா" என்று. சுள்ளென்று விழுந்த வார்த்தை அடிகளால், அவன் விலகி போவான்.
இது, அவளது மனநிலை மாத்திரம் அல்ல... தவறு செய்ய தூண்டு பவர்களை பார்த்து, தவறு செய்ய விருப்பமில்லாதவர்கள் கேட்கும் கேள்வி தான்அது. மைனாரிட்டியாய் இருக்கும் தவறிழைப்போர், தாங்கள் மெஜாரிட்டியாக சொல்லும் வார்த்தை ஜாலங்கள் தான் இவை என்று வைத்து கொள்ளலாமோ. ஆட்டோவில், பஸ்ஸில் எத்தனையோ பேர் பணத்தை தவறவிடுகிறார்கள். பணத்தை கண்டெடுக்கும் எல்லோருமே,
தாங்கள் தப்பு செய்ய ஒரு சாதகமான சூழ்நிலை கிடைத்து விட்டது என்று பணத்தை அபகரிக்க நினைக்கிறார்களா... இல்லையே. சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்து விடுகிறார்களே.
பாமர மக்கள் ஒரு அற்புதமான வாக்கியம் சொல்வார்கள், " ஒழுங்கா சம்பாதிச்ச காசே ஒட்ட மாட்டேங்குது. இது எதுக்கு" என்று. ஆனால்
மேதாவிகள் இதைவிட அழகாக பேசுவார்கள். தங்கள் தவறுகளுக்கு நியாயம் கற்பிக்க- "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு".... "தேனை எடுத்தவன் நக்காமலா இருப்பான"... என்றெல்லாம் பேசி திரிவார்கள்.
ஏழ்மையில் பட்டினி கிடப்பது சூழ்நிலை... செழுமையில் விரதம் இருப்பது
மனநிலை... மருத்துவர் சொல்லி உணவு கட்டுபாடு கொள்வது சூழ்நிலை...
இயல்பாகவே அளவாக உண்டு வாழ்வது மனநிலை... மனநிலையையும், சூழ்நிலையையும் ஒன்றாக்க முடியுமா? என் நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்வார். "தனது எல்லா கெட்ட பழக்கங்களுக்கும் நண்பர்கள் தான் காரணம்" என்று. முதலாம் ரகத்தவர்கள், தங்கள் தவறுகளுக்கு நியாயம் கற்பிக்கிறார்கள் என்றால, இவர்கள் தங்கள் தவறுகளுக்கு பிறர் மீது பழி போடுகிறார்கள். நான் கேட்பேன், "உங்க ரெண்டு கை, ரெண்டு காலை கட்டிப் போட்டுட்டு, யாராவது உங்க வாயில பிராந்திய ஊத்துனாங்களா".
நண்பர் மது அருந்த கூப்பிடுவது சூழ்நிலை... அவர்களோடு போவதா, வேண்டாம்மா என்று தீர்மானிப்பது மனநிலை... காதலனின் இழுப்புக்கு போக விரும்பாததால் தான், அவள் அவ்வளவு பெரிய வார்த்தைகளை சொல்லி தப்பினாள். இங்கே நண்பனால் தப்பித்து இருக்க முடியாதா... முடிந்து இருக்கும். ஆனால் தப்பும் மனநிலை இல்லையே... ஒரு விலைமாது தெருவில் நின்று வலை வீசுகிறாள். பத்து பேர் தப்பி
விடுகின்றனர். பதினோராவது நபர் தான் அவள் பின்னே போகிறான். பத்து பேர் நினைக்கவில்லையே, "இந்த காலத்துல யாரு தான் தப்பு பண்ணல" என்று.
லஞ்சம் வாங்கும் ஊழியர்களுக்கு மத்தியில் லஞ்சம் வாங்காதவர்களும்
இருக்கிறார்களே. அவர்கள் வாங்குவதால் பெறும் மகிழ்ச்சியை, இவர்கள்
வாங்காததால் பெறுகிறார்கள். இவர்களிடம் வந்து அவர்கள், "யார் தான் தப்பு பண்ணல. எதுக்கு பயப்படுறிங்க. மாட்டும் போது பார்த்துக்கலாம். " என்று சொன்னால், இவர்களுக்கு கோபம் வரும். வரவேண்டும. வருவது இயல்பு தானே. தப்பு செய்ய வைக்கும்- நிறைய சந்தர்ப்பங்கள். தப்பி வருவதே நம் சாமர்த்தியம்.
டிவி மனிதனை கெடுக்கிறது என்பது குற்றச்சாட்டு. அது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் டிவியை இயக்கக் கூடிய சுவிட்ச் நம் கையில் தானே உள்ளது. எந்த டிவியும் தானாக சுவிட்ச் ஆன் செய்வதில்லையே.
உலகில் எல்லாமே இரண்டு இரண்டாக உள்ளது. அவை எப்போதும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டே இருப்பவை. அவன் தன் வழிக்கு இவனை இழுப்பான். இவன் தன் வழியை பார்த்து கொண்டு தப்பி ஓடுவான். அவனும் விடாமல் துரத்துவான். சரி... எது சரி. மனநிலையா... சூழ்நிலையா... தப்பு செய்ய நினைக்கும் மனநிலை கொண்டவர்கள் அல்லது தப்பை தப்பாக பார்க்காதவர்கள், சூழ்நிலை கிடைக்கும் போது தவறுகிறார்கள். உறுதியான மனம் கொண்டவர்கள், சரியாக வாழ்வதில் கிடைக்கும் மகிழ்ச்சியை ருசித்தவர்களை சூழ்நிலை ஒன்றுமே பண்ணாது. மனநிலையே ஜெயிக்கும்.
"சந்தர்ப்பம் கிடைக்காததால் தான் யோக்கியர்களாக இருக்கிறார்கள் " என்று சொல்லப் படுபவர்கள், வாழ்க்கையை ருசிக்க(கெட்டுப்போக) சந்தர்ப்பங்களை எதிர் நோக்குகிறார்கள். அவர்களோடு சூழ்நிலையை வென்றவர்களை ஒப்பிடவே கூடாது. வாச மலர்களோடு காகிதப்பூவை ஒப்பிடலாமா. ஒப்பிடத்தான் முடியுமா...

No comments:
Post a Comment